குற்றம் யார் மீது...


ஒளிந்திருக்கும் போது;
இழுத்து வருவாய்;
உறவினரோடுக்
கதைக்கச் சொல்லிக்
காதைத் திருகுவாய்!

வெட்கப்படும் எனைத்;
திட்டித்தீர்ப்பாய்;
சிறுப்பிள்ளைக்கு என்ன
கூச்சம் என்று;
முதுகில் தட்டுவாய்!

இறுகிய;
இறக்கத்தில்
இலவசமானக் குறைந்த
ஆடையில் ஊர்ச்
சுற்றிக் காட்டுவாய்!

பள்ளிப் படிப்பிலே;
வீரம்; தீரம் என்று;
சூடேற்றிக்;
காதைச் சூடேற்றும்
கைப்பேசியைக் கரத்தில்
திணித்தாய்!
மனதில்மெல்லியதாய்
ஆசையை விதைத்தாய்!

கனாவோடு உலாவரக்;
கல்லூரிக் கைக்கொடுத்தது;
நீ கொடுத்தச் சுதந்திரம்;
காற்றில் பறந்து ஆடியது;
இன்று வீட்டைவிட்டு;
காரில் பறந்து ஓடியது!

முடிந்தப்பின்னே
மூக்கைச் சிந்திப்
பயனில்லை;
ஏற்றுக்கொண்டால்
படி ஏறிவருவோம்
நம் வீட்டிற்கு;
ஒதுக்கிவிட்டால்;
ஓடுகாலிப் பெற்றோர்
என்றப் பட்டம் வரும்
உங்களுக்கு!

ஒளிந்திருக்கும் போது;
இழுத்து வருவாய்;
உறவினரோடுக்
கதைக்கச் சொல்லிக்
காதைத் திருகுவாய்!

வெட்கப்படும் எனைத்;
திட்டித்தீர்ப்பாய்;
சிறுப்பிள்ளைக்கு என்ன
கூச்சம் என்று;
முதுகில் தட்டுவாய்!

இறுகிய;
இறக்கத்தில்
இலவசமானக் குறைந்த
ஆடையில் ஊர்ச்
சுற்றிக் காட்டுவாய்!

பள்ளிப் படிப்பிலே;
வீரம்; தீரம் என்று;
சூடேற்றிக்;
காதைச் சூடேற்றும்
கைப்பேசியைக் கரத்தில்
திணித்தாய்!
மனதில்மெல்லியதாய்
ஆசையை விதைத்தாய்!

கனாவோடு உலாவரக்;
கல்லூரிக் கைக்கொடுத்தது;
நீ கொடுத்தச் சுதந்திரம்;
காற்றில் பறந்து ஆடியது;
இன்று வீட்டைவிட்டு;
காரில் பறந்து ஓடியது!

முடிந்தப்பின்னே
மூக்கைச் சிந்திப்
பயனில்லை;
ஏற்றுக்கொண்டால்
படி ஏறிவருவோம்
நம் வீட்டிற்கு;
ஒதுக்கிவிட்டால்;
ஓடுகாலிப் பெற்றோர்
என்றப் பட்டம் வரும்
உங்களுக்கு!

No comments:

Post a Comment