வெங்காயம்..


ஏறிப்போன விலையால்
மாறி நிற்கும் விழிகள்;
அழ வைக்கும்
தோல்களுக்கு;
அழுதுபுலம்பும் குழம்பு!

உயர்ந்துப்போனப்
பொன்னகையால்;
மக்களுக்கு மறந்துப்போனப்
புன்னகை;
காரம் வீசும் காய்கறியால்
கண்களைக் கசக்கும்
இந்த நிலை!

பூட்டிவைக்கும் பொருட்களில்
இதுவும் ஒன்று என்றாயிற்று;
ஒன்றுமில்லை வார்த்தைக்கு;
வெங்காயம் அருகதை
இழந்து நாளாயிற்று!

ஏறிப்போன விலையால்
மாறி நிற்கும் விழிகள்;
அழ வைக்கும்
தோல்களுக்கு;
அழுதுபுலம்பும் குழம்பு!

உயர்ந்துப்போனப்
பொன்னகையால்;
மக்களுக்கு மறந்துப்போனப்
புன்னகை;
காரம் வீசும் காய்கறியால்
கண்களைக் கசக்கும்
இந்த நிலை!

பூட்டிவைக்கும் பொருட்களில்
இதுவும் ஒன்று என்றாயிற்று;
ஒன்றுமில்லை வார்த்தைக்கு;
வெங்காயம் அருகதை
இழந்து நாளாயிற்று!

No comments:

Post a Comment