சொகுசுக் கைதி


விடுப்பு முடிவிற்கு
நெருங்கும் போது
வெடிக்கும் மனம்;
மிச்சம் உள்ள நாட்களும்
உன்னோடு;
சொச்சம் வைக்காமல்!

தேம்பி அழுது;
வீங்கிப்போன உன்
விழிகளைக் காண
முடியாமல்;
உன் உச்சத்தலைக்கு
முத்தமிட்டு
ஒளித்துக்கொள்வேன்;
என் விழி நீரை
உன் கூந்தலோடு!

புரியாமல் சுற்றி வரும்
பிள்ளை அடுக்கிவைக்கும்;
அடுத்தமுறை வரும்போது;
விளையாட்டுச் சாமான் என்று..

பழகிப்போனாலும்
இளகிய மனம் கொண்ட
அன்னையோ;
அழுதுவடிவாள் – எனை
அணைக்க வருவாள்!

ஒட்டி உறவாடிய
நண்பர்கள்;
கட்டியணைத்து
காணாதக் கண்ணீர் துளிகள்
என் காதோடு மெல்லமாய் வழிய!

இறுதியாகக் கையசைத்து;
சொகுசுக் கைதியாக;
அடக்கிவைத்த அழுகையோடு!

குழிவிழுந்து;
இளித்து நிற்கும்;
என் ஊர் சாலையும்;
உவப்பாய் இருக்க;
கசப்பாய் காட்சியளிக்கும்;
வளைகுடாச் சாலை!

ஒற்றைக் கட்டிலில்;
குளுக் குளு அறையிலும்;
உள்ளம் வெதும்பி;
கண்கள் பிதுங்கி;
சப்தமில்லாமல் அழுகை
தலையணைக்குச் சமர்ப்பணமாய்!

விடுப்பு முடிவிற்கு
நெருங்கும் போது
வெடிக்கும் மனம்;
மிச்சம் உள்ள நாட்களும்
உன்னோடு;
சொச்சம் வைக்காமல்!

தேம்பி அழுது;
வீங்கிப்போன உன்
விழிகளைக் காண
முடியாமல்;
உன் உச்சத்தலைக்கு
முத்தமிட்டு
ஒளித்துக்கொள்வேன்;
என் விழி நீரை
உன் கூந்தலோடு!

புரியாமல் சுற்றி வரும்
பிள்ளை அடுக்கிவைக்கும்;
அடுத்தமுறை வரும்போது;
விளையாட்டுச் சாமான் என்று..

பழகிப்போனாலும்
இளகிய மனம் கொண்ட
அன்னையோ;
அழுதுவடிவாள் – எனை
அணைக்க வருவாள்!

ஒட்டி உறவாடிய
நண்பர்கள்;
கட்டியணைத்து
காணாதக் கண்ணீர் துளிகள்
என் காதோடு மெல்லமாய் வழிய!

இறுதியாகக் கையசைத்து;
சொகுசுக் கைதியாக;
அடக்கிவைத்த அழுகையோடு!

குழிவிழுந்து;
இளித்து நிற்கும்;
என் ஊர் சாலையும்;
உவப்பாய் இருக்க;
கசப்பாய் காட்சியளிக்கும்;
வளைகுடாச் சாலை!

ஒற்றைக் கட்டிலில்;
குளுக் குளு அறையிலும்;
உள்ளம் வெதும்பி;
கண்கள் பிதுங்கி;
சப்தமில்லாமல் அழுகை
தலையணைக்குச் சமர்ப்பணமாய்!

4 comments:

  1. பக்காவா இருக்குங்க உங்க கவிதை. நான் பொறுமையாக ஒரு வரி விடாமல் வாசித்தேன். நம்ம கடைப் பக்கமும் கொஞ்சம் வாங்க.

    ReplyDelete
  2. மிகவும் நன்றி தஞ்சை குமணன் அவர்களே. உங்களின் வருகையை தினமும் எதிர்பார்க்கிறேன்.

    ReplyDelete
  3. கடந்த
    இரண்டு வாரங்களுக்குமுன்
    அகத்தினில் பூட்டிவைத்த
    நிஜங்களின் நிழல்கள்
    வரிகளில் கோர்க்கப்பட்ட
    கவிதையாய்

    திரவியம் தேடி அக்கரை கடந்த உறவுகளுக்கு
    இந்த கவிதை சமர்பன்னம் ஆகட்டும்

    ReplyDelete
  4. மமார்ந்த நன்றிகள் செய்தாலி அவர்களே

    ReplyDelete