மண் நான் மலடி


அபரித விளைச்சலுக்கு
இச்சைக் கட்டி;
விஞ்ஞானம் என்றுக்
கச்சைக்கட்டி;
புத்தம் புது மருந்து எனச்
சப்பைக்கட்டி;
மகசூல் என
பெயர் கட்டி – என்
மகப்பேற்றை அறுவடைச்செய்த
மனிதா!

அழகானக் கருவறைக்கு
நீ கொடுத்தச்
சத்து மாத்திரைகளால்;
என் கருக்கலைந்து;
என் தரம் உருக்குலைந்து!
மலட்டுத்தன்மையுடன்
மண் நான்!

அபரித விளைச்சலுக்கு
இச்சைக் கட்டி;
விஞ்ஞானம் என்றுக்
கச்சைக்கட்டி;
புத்தம் புது மருந்து எனச்
சப்பைக்கட்டி;
மகசூல் என
பெயர் கட்டி – என்
மகப்பேற்றை அறுவடைச்செய்த
மனிதா!

அழகானக் கருவறைக்கு
நீ கொடுத்தச்
சத்து மாத்திரைகளால்;
என் கருக்கலைந்து;
என் தரம் உருக்குலைந்து!
மலட்டுத்தன்மையுடன்
மண் நான்!

2 comments:

  1. நிலமும் ஒரு கருவறைதான் சகோ
    அந்த மனிதர்களுக்கு நீங்கள் சொன்ன உண்மைகள் நற்கென்று உரைக்கட்டும்

    ReplyDelete
  2. நன்றிகள் உங்களுக்கு செய்தாலி அவர்களே.

    ReplyDelete