ETA



கட்டிப்பிடித்தச் சொந்தங்களை
இறுதியாகத் தொட்டுவிட்டு;
ஆமை வேகத்தில்
விமான நிலையத்தில்
ஆசைத் தீர என் தேசத்தில்
நடந்துவிட்டு;
அந்நியத் தேசமான
அமீரகத்தில் அமைதியாக!

காக்கா உறவும்
நானாவும் காதோடு
ரீங்காரமிட;
ஒட்டுமொத்தத்
தமிழகத்தை ஓரளவிற்கு
ஒளித்திருக்கும்;
ஒய்யார நிறுவனத்தில்;
புத்தம் புதுச் சொந்தங்களுடன்
இங்கே!

படித்தவரும் படிக்காதவரும்;
பணி என்ற ஒற்றை நூலில்
கட்டப்பட்டு;
புரியாத நட்பிற்கு கட்டுப்பட்டு!

கற்கை முடித்து இங்கேக்
கற்றுக்கொண்டவர் பலர்;
கற்கையில் கூடக்
கரும்பலகைக் காணாமல்
உயர்ந்தவர்களும் பலர்!

ஊரில் இருந்து திரும்பும்
சக ஊழியரிடம்;
உரிமையுடன்
திண்பண்டம் கேட்டு;
கொடுத்தால்
நொறுக்கித் தீனியை மென்று;
கொடுக்காவிடில்
கோபத்தால் கொன்று;
உறவுகள் சிலிர்க்கும்;
புன்னகைத் தெறிக்கும்!


கட்டிப்பிடித்தச் சொந்தங்களை
இறுதியாகத் தொட்டுவிட்டு;
ஆமை வேகத்தில்
விமான நிலையத்தில்
ஆசைத் தீர என் தேசத்தில்
நடந்துவிட்டு;
அந்நியத் தேசமான
அமீரகத்தில் அமைதியாக!

காக்கா உறவும்
நானாவும் காதோடு
ரீங்காரமிட;
ஒட்டுமொத்தத்
தமிழகத்தை ஓரளவிற்கு
ஒளித்திருக்கும்;
ஒய்யார நிறுவனத்தில்;
புத்தம் புதுச் சொந்தங்களுடன்
இங்கே!

படித்தவரும் படிக்காதவரும்;
பணி என்ற ஒற்றை நூலில்
கட்டப்பட்டு;
புரியாத நட்பிற்கு கட்டுப்பட்டு!

கற்கை முடித்து இங்கேக்
கற்றுக்கொண்டவர் பலர்;
கற்கையில் கூடக்
கரும்பலகைக் காணாமல்
உயர்ந்தவர்களும் பலர்!

ஊரில் இருந்து திரும்பும்
சக ஊழியரிடம்;
உரிமையுடன்
திண்பண்டம் கேட்டு;
கொடுத்தால்
நொறுக்கித் தீனியை மென்று;
கொடுக்காவிடில்
கோபத்தால் கொன்று;
உறவுகள் சிலிர்க்கும்;
புன்னகைத் தெறிக்கும்!

9 comments:

  1. ஏக்கம் உங்கள் கவிதையில் .....நன்றாய் இருக்கிறது

    ReplyDelete
  2. வெளிநாட்டு வாழ்க்கையை சித்தரிக்கும் அழகிய கவிதை யாசர்..

    ReplyDelete
  3. வரிகளை அழகாக உணர்ந்து அதற்கு கருத்து தெரிவித்த சகோதரர் ரியாஸ் அவர்களுக்கு மனமார்ந்த நன்றி.

    ReplyDelete
  4. கவிதைகளை பாராட்டிய கோவை நேரத்திற்கு நெஞ்சம் நிறைந்த நன்றி.

    ReplyDelete
  5. இது கவிதை அல்ல
    இங்கு
    அமீரக வாழ் தமிழர்களின்
    வாழ்கையின் வரி நிழல்

    நிஜங்களுக்கு
    உயிர்கொடுக்கும் கவித் திறமைக்கு
    என் பாராட்டுக்கள் வாழ்த்துக்கள் சகோ ..

    ReplyDelete
  6. உங்களின் வருகையை தினமும் வரவேற்கிறேன். ஆரோக்கியமான கருத்தரிக்கு மிக்க நன்ற்.

    ReplyDelete
  7. கொடுத்தால்
    நொறுக்கித் தீனியை மென்று;
    கொடுக்காவிடில்
    கோபத்தால் கொன்று;
    உறவுகள் சிலிர்க்கும்;
    புன்னகைத் தெறிக்கும்!---உண்மை வரிகள்! வாழ்த்துக்கள்! நன்றி! அன்புடன் அழைக்கிறேன் :"பாராட்டுங்க! பாராட்டப்படுவீங்க!"

    ReplyDelete
  8. மிக்க நன்றி தனபாலன் அவர்களே.

    ReplyDelete
  9. சுட்டியை சொடுக்கி படியுங்கள்

    ---- >
    புலிகளின் தமிழ்முஸ்லிம் இனஒழிப்பின் ஈரநினைவுகள். பகுதி 3.
    ஈழத்தில் புலிகளால் வதைக்கப்பட்ட இன அழிப்பு செய்யப்பட்ட‌ இஸ்லாமியர்கள் குறித்தப் பேச மறுப்பவனும் பேசுவதைத் தடைசெய்பவனும் தான் விரும்பிய குரலில் இஸ்லாமியர்களைப் பேச நிர்ப்பந்திப்பவனும் இஸ்லாமியர்களின் தோழனா அல்லது மூத்த‌ நரேந்திர மோடியா எனத் தோழர்கள் சிந்திக்க வேண்டும்.

    இலங்கையில் முஸ்லிம்களுக்கு நடந்திருப்பது என்ன? நடப்பது என்ன? என்பது பற்றி தெளிவாக இந்திய மக்களுக்கு கூற வேண்டியுள்ளது. உண்மை அறியாத மக்கள் கொடூரப் புலிகளுக்கு ஆதரவுக் கொடி தூக்குகின்றனர்
    < ----

    ReplyDelete