தனிமை வீடு


துவண்டுப்போனச்
செல்களும்
சிலிர்த்து நிற்கும்;
எனை நீ வயிற்றில்
உதைத்தத் தருணம்;

கலங்கியக் கண்ணீர்
காதை நிரப்ப;
உறவுகள் ஆறுதல்
உரைக்க;
மருத்துவமனையில் நான்!

மரணமோ எனை;
வலியால் மிரட்ட;
யார் என அறியாத
மகப்பேறு மருத்துவர்கள்;
உன் வரவுக்காக
என் வழித்தடத்தை நோக்க;
வெட்கம் எனைக் கொல்ல;
உனக்காகதான் என
அழுகையால் எனக்கே
ஆறுதல் தழுவ;
அழகாய் நீ என் பக்கத்தில்
நான் மயக்கத்தில்!

கணக்கில்லா
முத்தத்தோடு வளர்ந்த நீ;
கணக்குப்பார்த்து எங்கள்
கணக்கை முடிக்க;
இன்று முதியோர் இல்லத்தில்
நானும் உன் தகப்பனும்!

அழுகை நேரம் போக;
உள்ளம் உனைதான் தேடும்;
உண்டாயா உறங்கினாயா என்று!

தலைப்புத் தந்தவர்:
SABITHA - TAMILNADU

துவண்டுப்போனச்
செல்களும்
சிலிர்த்து நிற்கும்;
எனை நீ வயிற்றில்
உதைத்தத் தருணம்;

கலங்கியக் கண்ணீர்
காதை நிரப்ப;
உறவுகள் ஆறுதல்
உரைக்க;
மருத்துவமனையில் நான்!

மரணமோ எனை;
வலியால் மிரட்ட;
யார் என அறியாத
மகப்பேறு மருத்துவர்கள்;
உன் வரவுக்காக
என் வழித்தடத்தை நோக்க;
வெட்கம் எனைக் கொல்ல;
உனக்காகதான் என
அழுகையால் எனக்கே
ஆறுதல் தழுவ;
அழகாய் நீ என் பக்கத்தில்
நான் மயக்கத்தில்!

கணக்கில்லா
முத்தத்தோடு வளர்ந்த நீ;
கணக்குப்பார்த்து எங்கள்
கணக்கை முடிக்க;
இன்று முதியோர் இல்லத்தில்
நானும் உன் தகப்பனும்!

அழுகை நேரம் போக;
உள்ளம் உனைதான் தேடும்;
உண்டாயா உறங்கினாயா என்று!

தலைப்புத் தந்தவர்:
SABITHA - TAMILNADU

5 comments:

 1. அஸ்ஸலாமு அழைக்கும் வரஹ்.
  ஒரு தாயின் பார்வையில் வலியோடு சொல்லப்பட்ட கவிதை.
  //அழுகை நேரம் போக;
  உள்ளம் உனைதான் தேடும்;
  உண்டாயா உறங்கினாயா என்று!//
  உண்மையான வார்த்தைகள். நாம் என்ன செய்தாலும் மன்னிக்கும் குணம் தாய்க்கு மட்டுமே சாத்தியம்.
  நான் குறிப்பிட்டதை வைத்து முதியோர் இல்லம் பற்றி எழுதியதற்கு நன்றி சகோ.ஒரு சின்ன திருத்தம்.நான் ஸ்ரீலங்கா இல்லை.தமிழ்நாடு.

  ReplyDelete
 2. சகோதிரி சபிதா அவர்களுக்கு மிக்க நன்றி. நீங்கள் சொன்னதுப்போலே உங்கள் பகுதியை தமிழ்நாடு என்று மாற்றிவிட்டேன்.

  ReplyDelete
 3. தாயின் தவிப்பை சொல்லிப் போகும் வரிகள் .
  சற்று வலிக்கத்தான் செய்கிறது .

  ReplyDelete
 4. மிகுந்த நன்றி சசிகலா அவர்களே;

  ReplyDelete