நேரத்தைத் தின்று வடித்த
தடித்த வரிகளுக்கு வடிகாலிட்டு;
எழுத்துப்பிழைக் கொண்டாலும்;
கருத்துப்பிழையைக் கொன்று;
செல்கள் சிலிர்த்துக்
கொட்டிய வரிகளும்;
உள்ளம் கொதித்து
உதிர்ந்த வலிகளும்;
முற்றிப்போய்
முணகலோடுப் பிரசவமாகி
ஐந்நூறாவதுக் கவிதையாக!
விதைத்த வரிகள்
திரும்பிப்பார்க்கும் போது
திகைப்பாய்;
இனி விதைக்கப்போவதை
முன்னோக்கும் போது
மலைப்பாய்;
மெய் மட்டுமே சுமந்து;
பொய்யைக்
கருத்தடைச் செய்ய;
அச்சத்துடன் அடுத்தக்
கவிதைக்காக!
சகோவின் ஐநூறாவது கவிதைக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்
ReplyDeleteநம்மைச் சுற்றிய
சமூகத்தில் கொட்டிச் சிதறிகிடக்கும்
நிஜங்களை கவிமாலையில்
இன்னும் இன்னும் கோர்த்து
உலகுகிர்க்கு சொல்லுங்கள் கவிஞரே
உங்களின் மனமார்ந்த பாராட்டிற்கு என் இதயம் கனிந்த நன்றிகள் சகோதரர் செய்தாலி அவர்களே
ReplyDeleteஅஸ்ஸலாமு அழைக்கும் வரஹ்.
ReplyDeleteதங்கள் இனிமையான பயணம் சமூக சிந்தனைகளை பிரதிபலிக்கக் கூடியதாய் இருக்க வாழ்த்துக்கள் சகோ.
சகோதிரி ஆயிஷாபேகம் அவர்களுக்கு மிக்க நன்றி. மேலும் துஆவை எதிர்பார்த்தவனாக.
ReplyDeleteசூப்பர் ! மேன்மேலும் சிறக்க வாழ்த்துக்கள் !
ReplyDeleteஉங்களின் வழமையான வருகையும் வளமான கருத்திக்கும் மனமார்ந்த நன்றிகள் தனபாலன் அவர்களே.
ReplyDelete