மறந்துப்போன
மனிதநேயம்;
மரத்துவிட்ட
மனிதனின் மனம்!
குட்டி நாய் அடிப்பட்டாலும்
குமுறும் சமூகம் – எங்களை
வெட்டிப்போட்டாலும்
வேடிக்கைப் பார்க்கும்!
நல்ல உள்ளங்களுக்கு
நடுவே சில மதம் பிடித்த யானை;
மிதித்துவிட்டு
மிரட்டிவிட்டுச் செல்லும் - எங்களை
விரட்டி விரட்டிக் கொல்லும்!
விடுதலைக்கு
வித்திட்ட சத்தான சமூகம்;
களம் காண கல்விக்கு
பிரிவுக்கொடுத்தோம் பின்னாளில்
பறிக்கொடுத்தோம்!
மறந்துவிட்ட எங்கள் தியாகம்
மறைத்துவிட்டது எங்கள் சோகம்!
வெடித்தாலும் எங்கள் மீதேப் பழி
இடித்தாலும் எங்கள் மீதேப் பழி;
காஷ்மீரில் இருந்து
கன்னியாக்குமரிவரை
எங்களுக்குப் பிடித்த
காவலர்கள் குறைவு – பிடிக்காமல்;
எங்களைப் பிடித்த காவலர்கள் நிறைவு!
ஓட்டுக்கேட்க மட்டும்
ஓடி வரும் அரசியல் கூட்டம்;
வினாவோடு நாங்கள் போகும்போது
விடைக்கொடுத்துவிட்டு சென்றிடும்
வினோத அரசியல்வாதிகள்!
பத்திரிக்கைகளின்
பக்கம் நிரம்ப
முதலில் எங்கள் மீது பழிப்போடும்;
பின்புதான் வழித்தேடும்
குற்றம் செய்தது யார் என்று!
Tweet
No comments:
Post a Comment