குடும்பத்திற்காக...


மூட்டைப் பூச்சியும்
செல்லாத;
நாங்கள் நாட்டுக்கு
சொல்லாத குருவிக் கூண்டு!

தினமும் குளித்தாலும்
குளிக்காமல் தோற்றமளிக்கும்
குளியளறை கறையுடன்!

குப்பைக் கூடையிலும்
புலன்விசாரணை
எச்சில் டப்பாவுக்கு!

மடிக்கணினியை மடியில் சுமந்து
மனதில் ஆசையை சுமந்து
காதோடு பேசினாலும்
சப்தமாய் விழும்;
நித்தமும் நடப்பதால்
வெட்கம் விட்டுப் போகும்!

ஒருத் துளி வியர்வையும்
ஒவ்வாது என் ஊரில்;
இங்கே மணமாகிப் போனது
உள்ளம் ரணமாகிப் போனதால்!

தியாகங்கள் சாகாமல்
காப்பாற்றும் தியாகிகள்
நாங்கள்!
பொறிக்கப்படாத வரலாற்றுக்கு
பொக்கிஷமாய்  என்னைப் போன்ற
சகோதரர்கள்!

எல்லாம் தெரிந்தும்
எங்களுக்கான இடம் இதுதான்;
ஒற்றைவரியில் விளக்க 
ஒருவரிப் பதில்
"குடும்பத்திற்காக"

மூட்டைப் பூச்சியும்
செல்லாத;
நாங்கள் நாட்டுக்கு
சொல்லாத குருவிக் கூண்டு!

தினமும் குளித்தாலும்
குளிக்காமல் தோற்றமளிக்கும்
குளியளறை கறையுடன்!

குப்பைக் கூடையிலும்
புலன்விசாரணை
எச்சில் டப்பாவுக்கு!

மடிக்கணினியை மடியில் சுமந்து
மனதில் ஆசையை சுமந்து
காதோடு பேசினாலும்
சப்தமாய் விழும்;
நித்தமும் நடப்பதால்
வெட்கம் விட்டுப் போகும்!

ஒருத் துளி வியர்வையும்
ஒவ்வாது என் ஊரில்;
இங்கே மணமாகிப் போனது
உள்ளம் ரணமாகிப் போனதால்!

தியாகங்கள் சாகாமல்
காப்பாற்றும் தியாகிகள்
நாங்கள்!
பொறிக்கப்படாத வரலாற்றுக்கு
பொக்கிஷமாய்  என்னைப் போன்ற
சகோதரர்கள்!

எல்லாம் தெரிந்தும்
எங்களுக்கான இடம் இதுதான்;
ஒற்றைவரியில் விளக்க 
ஒருவரிப் பதில்
"குடும்பத்திற்காக"

No comments:

Post a Comment