சிரித்துப்பேசும் நானோ சிலநேரம்
சினந்துக்கொள்வேன் உன்னைக்
கடிந்துக்கொள்வேன்!
இல்லாத துன்பத்தை
இழுத்துப் போர்த்திக்கொண்டேன்;
இல்லாள் உனை நான் சொல்லாலே
குத்தினேனோ!
பிறந்தவீட்டை விடுத்து என்னிடம்
பறந்து வந்த சொந்தமாய் நீ;
இனியும் உன்னை கடுகடுக்க மாட்டேன்
உன் கர்பக்காலத்தைக் கண்டப் பிறகு!
அல்லல்படும் அவதியிலும்
எனைக் கண்டு அழகாய் சிரித்தவள் நீயோ;
எல்லோரும் தூங்கினாலும்
எட்டி உதைக்கும் நம் பிள்ளையை
தொட்டுப்பார்க்க எனை எழுப்பும்
இன்னொருக் குழந்தை நீயோ!
இனி வெடிக்கும் கோபம் வந்தாலும்
நீ பிரசவத்தில் துடித்தக் கதறலை நினைப்பேன்;
உடைந்துப் போகட்டும் என் சினம்
வடிந்துப் போகட்டும் என் கனல்!
இனியொருமுறை வந்தாலும் ஈகோ
துரத்தியடிப்பேன் ச்சீ ச்சீ கோ கோ!
//இனி வெடிக்கும் கோபம் வந்தாலும்
ReplyDeleteநீ பிரசவத்தில் துடித்த கதறலை நினைப்பேன்;
உடைந்துப் போகட்டும் என் சினம்
வடிந்துப் போகட்டும் என் கனல்!//
அருமையான வரிகள். வாழ்த்துக்கள்
//இனி வெடிக்கும் கோபம் வந்தாலும்
ReplyDeleteநீ பிரசவத்தில் துடித்த கதறலை நினைப்பேன்;
உடைந்துப் போகட்டும் என் சினம்
வடிந்துப் போகட்டும் என் கனல்!//
ஒவ்வொரு கணவன்மார்களும் மனதில் நிறுத்திக் கொள்ள வேண்டிய வரிகள்...