விலைக்கு விற்பவை...இன்றாவது கிடைக்குமா விடியல்
நாளும் என்  பெற்றோர்கள் படியில்;
ஒத்த வயதுள்ள தோழிகளெல்லாம்
ஒதுங்கிவிட்டார்கள் மணவாழ்க்கைக்கு!

வயது ஆகியும் வராத வரன்;
வந்தவர்களெல்லாம் கேட்பது சவரன்!
அமையாத மணத்தால்
அழுதிடும் மனம்!

அலட்டாமல் இருந்தாலும்
அடுத்தவர் வந்துக் கேட்பார்;
அமுங்கிக்கிடந்த ஆற்றாமையோ
ஆழம் கடந்துக் கதறும்!

முதிர்க்கன்னி  என்று
முத்திரையிட்டு அழைக்கும்;
நித்திரையைக் கெடுத்து இந்த உலகம்
சப்தமிட்டு சிரிக்கும்!

கவுரவப் பிச்சைக் கேட்டு
முதுகெலும்பில்லா கூட்டம் 
சீர்வரிசைக்  கேட்கும்!

இனி மார்தட்டும் முன்
மாட்டட்டும் அறிவிப்புப் பலகை
"இவர்கள்" விலைக்கு விற்பவை என்று!


இன்றாவது கிடைக்குமா விடியல்
நாளும் என்  பெற்றோர்கள் படியில்;
ஒத்த வயதுள்ள தோழிகளெல்லாம்
ஒதுங்கிவிட்டார்கள் மணவாழ்க்கைக்கு!

வயது ஆகியும் வராத வரன்;
வந்தவர்களெல்லாம் கேட்பது சவரன்!
அமையாத மணத்தால்
அழுதிடும் மனம்!

அலட்டாமல் இருந்தாலும்
அடுத்தவர் வந்துக் கேட்பார்;
அமுங்கிக்கிடந்த ஆற்றாமையோ
ஆழம் கடந்துக் கதறும்!

முதிர்க்கன்னி  என்று
முத்திரையிட்டு அழைக்கும்;
நித்திரையைக் கெடுத்து இந்த உலகம்
சப்தமிட்டு சிரிக்கும்!

கவுரவப் பிச்சைக் கேட்டு
முதுகெலும்பில்லா கூட்டம் 
சீர்வரிசைக்  கேட்கும்!

இனி மார்தட்டும் முன்
மாட்டட்டும் அறிவிப்புப் பலகை
"இவர்கள்" விலைக்கு விற்பவை என்று!

No comments:

Post a Comment