ஓய்வான நேரத்திலும்
உன்னை நினைப்பேன்;
இலைத் தாங்கிய பனியாக என்
இமைத் தாங்கும் கண்ணீர்!
உன் சட்டையை முகர்ந்துப் பார்த்து
மூச்சிவிடுவேன் உன் வாசத்தைக் கண்டு
என் சுவாசத்தைக் கொண்டு!
நாட்டிற்கு வந்தால் கட்டியப்
பெட்டியை திறக்காதே அன்றே;
பெட்டிக்காக ஒட்டி இருக்கட்டும்
நம் பிள்ளைகள் உன்னோடு;
திறந்தால் பிரிந்து விடுவார்கள்
விளையாட பறந்து விடுவார்கள்!
புதிதாக சொல்ல எதுவுமில்லை
புகைப்படமாய் நீ
என் தலையணைக்குள்;
வருடாத உன் விரல்களுக்கு
வந்து சேரட்டும் என் கண்ணீர்;
இப்படிக்கு வாய்விட்டு
கதற முடியாத
உன் மனைவி!! Tweet
very good......
ReplyDeleteHeart ah Romba Touch Pannitinga Thala...
Keep Rocking..
http://nidurseasons.blogspot.com/2010/10/by_07.html
ReplyDeleteபிறகும்போழுது உங்கள் அழுகை உங்கள் அன்னைக்கு கவிதையாக இருந்ததனால் உங்களால் அருவிபோல் கவிதை எழுத வருகின்றது . சில நேரங்களில் நீங்களும் அழுது எங்களையும் அழ வைக்கிறீர்கள் .
ReplyDelete