வெள்ளையன் ஓடியப்பின்னும்..
வெள்ளையன்
ஓடியப்பின்னும்
உட்கார்ந்து இருக்கும்
தலை வலி;
அவனது மொழி!

நேர்முகக்கானலிலும்
கோணலாய் ஆகும்
குளறுப்படி ஆங்கிலம்!

உள்ளங்கை வியர்க்க
நெஞ்சுப் படப் படக்க
மொழியை அறிவாக்கி
எங்கள் வழியை இருளாக்கி;
தொலைத் தூரத்தில் பிரகாசம்!

பேச நினைத்தாலும்
பாசக்கார நண்பர்கள்
சிரித்துத் தொலைப்பார்கள்
என்னை வறுத்தெடுப்பார்கள்! 

பயிற்சிக்கு தயாராகி
பேசிப் பார்ப்போம் ;
இல்லை இல்லை
நகைத்துப் பார்ப்போம்!

மொழி அறிவை
முகத்திலும் காட்டினேன்;
முடிவில் வென்றும் காட்டினேன்;
பாடி லாங்குவேஜ் உண்மையிலே
கைக்கொடுக்கும் பாதி லாங்குவேஜ்!வெள்ளையன்
ஓடியப்பின்னும்
உட்கார்ந்து இருக்கும்
தலை வலி;
அவனது மொழி!

நேர்முகக்கானலிலும்
கோணலாய் ஆகும்
குளறுப்படி ஆங்கிலம்!

உள்ளங்கை வியர்க்க
நெஞ்சுப் படப் படக்க
மொழியை அறிவாக்கி
எங்கள் வழியை இருளாக்கி;
தொலைத் தூரத்தில் பிரகாசம்!

பேச நினைத்தாலும்
பாசக்கார நண்பர்கள்
சிரித்துத் தொலைப்பார்கள்
என்னை வறுத்தெடுப்பார்கள்! 

பயிற்சிக்கு தயாராகி
பேசிப் பார்ப்போம் ;
இல்லை இல்லை
நகைத்துப் பார்ப்போம்!

மொழி அறிவை
முகத்திலும் காட்டினேன்;
முடிவில் வென்றும் காட்டினேன்;
பாடி லாங்குவேஜ் உண்மையிலே
கைக்கொடுக்கும் பாதி லாங்குவேஜ்!

2 comments:

 1. நான்

  ஊரெல்லாம் தேடிக்கொண்டே இருந்தேன்

  உன்னை

  கண் மூடியபடி.....

  கண்திறக்கும்போது கிடைத்துவிட்டாய்

  என்னருகே..........

  இழக்க மாட்டேன் இனி கண்மூடி

  நான்

  அன்வர் சதாத்

  ReplyDelete
 2. Nice job Mr.Yasir Arafath..

  ReplyDelete