வாக்கப்பட்ட வளைகுடாவில்
துக்கப்பட நேரமில்லை;
கருகும் வெயிலில்
கல்லைத் தூக்குவோம்;
செய்யாத வேலை இல்லை
செக்கு மாடு பரவாயில்லை;
அக்கு வேறு ஆணி வேறாய்ப்போனாலும்
ஆறுதல் சொல்ல நாதியில்லை!
அழுக்கு ஆடையே கவசமாய்
வியர்வைத் துளி
ஒட்டியிருக்கும் பாசமாய்!
மாறிவிடும் எல்லாமே
நாட்டுக்கு நான் போகையிலே;
ஊரே கைவைத்துப் பார்க்கும் மூக்கினிலே!
வெள்ளையும் சொள்ளையுமாய்
வெளியே செல்வோம்;
நறுக்கென நறுமணமும்
நடந்துப் போகும் தூரத்திற்கும்
பறந்துக் கொண்டுப் பைக்கில் செல்வோம்!
என்னைக் கண்டு ஏமாந்து
எல்லோரும் பிள்ளையை அனுப்ப;
வசமாக மாட்டிக்கொண்டோம்
வளைகுடாவில் விழுந்து விட்டோமென்று!
வாரிசுகள் உணரும் என்னைப் போல
நமட்டு சிரிப்பு சிரித்தாலும்
நாட்டில் யாருக்கும் சொல்லமாட்டோம்! Tweet
சோகமே சோகம்.
ReplyDelete