ஈரமானப் பாலை...தினந்தோறும் நீ கேட்பது
மனந்தோறும் மாறுக்கால்
போட்டு அமர்ந்திருக்கும்!

என்ன வேண்டுமென்றுக் கேட்டாலே
முதலில் என்னைச் சொல்வாய்;
பின்புதான் என்ன வேண்டுமென்றுச் சொல்லுவாய்!

கைப்பேசியில் தொடர்பறுந்தப் போதும்
தொடரும் நம் நினைவுகள்;
வைத்தப்பின்னும் பார்த்துக்கொண்டிருப்பேன்
உன் அழைப்புக்காக காத்துக்கொண்டிருப்பேன்!

வழக்கமான கேள்விகள்தான்
உண்டாயா உறங்கினாயா;
தினமும் நீ கேட்க இனிமையாக
இருக்கும் உள்ளம் குளுமையாக இருக்கும்!

முத்துக்கள் விழுந்த உன் பேச்சை
விளங்கிக் கொண்டே மீண்டும் விளிப்பேன்
புரியாததைப்போல் மீண்டும் கேட்பதற்கு!

நம் குழந்தையின் சிரிப்பை நான் கேட்க
நீ கொடுக்கும் சப்தம்;
சிரித்துக்கொள்வேன் முதல்
குழந்தையின் முணகலைக் கேட்டு!

வெத்துப் பாலையில்
ஒற்றையாய் நான் நிற்க
வெட்கமே இல்லாமல்
வியர்த்து விடும் என் விழிகள்
நீ இல்லாமல்!தினந்தோறும் நீ கேட்பது
மனந்தோறும் மாறுக்கால்
போட்டு அமர்ந்திருக்கும்!

என்ன வேண்டுமென்றுக் கேட்டாலே
முதலில் என்னைச் சொல்வாய்;
பின்புதான் என்ன வேண்டுமென்றுச் சொல்லுவாய்!

கைப்பேசியில் தொடர்பறுந்தப் போதும்
தொடரும் நம் நினைவுகள்;
வைத்தப்பின்னும் பார்த்துக்கொண்டிருப்பேன்
உன் அழைப்புக்காக காத்துக்கொண்டிருப்பேன்!

வழக்கமான கேள்விகள்தான்
உண்டாயா உறங்கினாயா;
தினமும் நீ கேட்க இனிமையாக
இருக்கும் உள்ளம் குளுமையாக இருக்கும்!

முத்துக்கள் விழுந்த உன் பேச்சை
விளங்கிக் கொண்டே மீண்டும் விளிப்பேன்
புரியாததைப்போல் மீண்டும் கேட்பதற்கு!

நம் குழந்தையின் சிரிப்பை நான் கேட்க
நீ கொடுக்கும் சப்தம்;
சிரித்துக்கொள்வேன் முதல்
குழந்தையின் முணகலைக் கேட்டு!

வெத்துப் பாலையில்
ஒற்றையாய் நான் நிற்க
வெட்கமே இல்லாமல்
வியர்த்து விடும் என் விழிகள்
நீ இல்லாமல்!

No comments:

Post a Comment