கறுப்பு வரலாறு...மணம் கொண்ட
மலராக மழலைகள் இங்கே;
மனம் கறுத்து
மழலைகளைக் கொன்ற
மா பாதகன் எங்கே!

வெறிப்பிடித்த உனக்கு
வெள்ளை மாளிகையில்
சுகமுண்டு;
கருவருத்த உனக்கு
கறுப்பு வரலாற்றில்
இடமுண்டு!

ஒற்றை உயிர்
இருக்கும் வரை
இறுதிவரைப் போராடுவோம்;
கரம் இரண்டும்
சோர்ந்தாலும்
கனல் மட்டும் எரியவிடுவோம்!

தீராத எங்கள் தாகம்
மாறாத எங்கள் கோபம்;
கண் எட்டும் வரை உனை விடுவதிலில்லை;
கல் உனைக் காட்டிக்கொடுக்கும்
காலமும் வெகுதொலைவில் இல்லை!

ஒளிய மரமும் உனை மறுக்குமடா
ஒழித்துக்கட்ட வருமோமடா!


மணம் கொண்ட
மலராக மழலைகள் இங்கே;
மனம் கறுத்து
மழலைகளைக் கொன்ற
மா பாதகன் எங்கே!

வெறிப்பிடித்த உனக்கு
வெள்ளை மாளிகையில்
சுகமுண்டு;
கருவருத்த உனக்கு
கறுப்பு வரலாற்றில்
இடமுண்டு!

ஒற்றை உயிர்
இருக்கும் வரை
இறுதிவரைப் போராடுவோம்;
கரம் இரண்டும்
சோர்ந்தாலும்
கனல் மட்டும் எரியவிடுவோம்!

தீராத எங்கள் தாகம்
மாறாத எங்கள் கோபம்;
கண் எட்டும் வரை உனை விடுவதிலில்லை;
கல் உனைக் காட்டிக்கொடுக்கும்
காலமும் வெகுதொலைவில் இல்லை!

ஒளிய மரமும் உனை மறுக்குமடா
ஒழித்துக்கட்ட வருமோமடா!

1 comment:

  1. வெள்ளை மாளிகையில் கொலைவெறியருக்கும் ஐநா சபையில் இனவழிப்பு நரபலி நாய்களுக்குமே வரவேற்பு மதிப்பளிப்பு. என்று மாறும் இந்த நிலை?

    ReplyDelete