படிக்காததினால்..

மனம் தந்து
மணம் கொண்டோம்;
மாதம் முடிவதற்கு முன்னமே
விழுந்துவிட்டேன் வலை(ளை)குடாவில்!

துவண்டுப் போன என் மனதிற்கு
தாங்கிக்கொள்ள உன் தோள்கள் இல்லை;

பிடிக்காத வேலையை
பிடித்துக் கொண்டிருக்கிறேன்
படிக்காததினால்!

மணவீட்டாரிடம் மதப்பாக
பல்தியா என பலமாக சொன்னாலும்
நாற்றத்தோடு நகர் உலாவரும் அவலம்!

களவாகிப் போன
கல்வியால் களம் கண்டு இங்கே நான்;
மாறிவிடு தலைமுறையே
மயக்கத்திற்கு முந்தும் முன்னே;
படித்துவிடு இப்படி பக்கம் பக்கமாய்
எழுதுவதற்கு முன்னே!
மனம் தந்து
மணம் கொண்டோம்;
மாதம் முடிவதற்கு முன்னமே
விழுந்துவிட்டேன் வலை(ளை)குடாவில்!

துவண்டுப் போன என் மனதிற்கு
தாங்கிக்கொள்ள உன் தோள்கள் இல்லை;

பிடிக்காத வேலையை
பிடித்துக் கொண்டிருக்கிறேன்
படிக்காததினால்!

மணவீட்டாரிடம் மதப்பாக
பல்தியா என பலமாக சொன்னாலும்
நாற்றத்தோடு நகர் உலாவரும் அவலம்!

களவாகிப் போன
கல்வியால் களம் கண்டு இங்கே நான்;
மாறிவிடு தலைமுறையே
மயக்கத்திற்கு முந்தும் முன்னே;
படித்துவிடு இப்படி பக்கம் பக்கமாய்
எழுதுவதற்கு முன்னே!

No comments:

Post a Comment