நீ வரும் வழியை..கண்ணீருடன் கடிதம்
காலத்தோடு வந்துவிடு என் கணவா;
எல்லாமே போயின வெறும் கனவா!

மனம் விட்டுப்பேச மணாளன் நீயில்லை
கனம் மட்டுமே மீதியாய்
தினம் எட்டிப்பார்க்கும்
இனம்புரியாத அழுகை மட்டும்!

சேர்ந்து வாழமுடியாமல்
சோர்ந்துப்போய் பாலையில்;
வாழ்வதற்க்காக வளைகுடாவிற்குச் சென்று
வாழாவெட்டியாக இப்படி ஆளுக்கொரு மூலையில்!

வளைகுடா வருமானமோ
வாய்க்கும் வயிற்றுக்கும் மட்டுமே;
முட்டி மோதிப் சேர்த்தாலும்
கட்டிப்போட ஒன்றுமில்லை!

ஒளியிளந்த என் முகமோ
ஓளிரும் நீ வந்தால்;
வலி விலகிப்போகும்
நீ வரும் வழியை
என் விழிக் கண்டால்!!


கண்ணீருடன் கடிதம்
காலத்தோடு வந்துவிடு என் கணவா;
எல்லாமே போயின வெறும் கனவா!

மனம் விட்டுப்பேச மணாளன் நீயில்லை
கனம் மட்டுமே மீதியாய்
தினம் எட்டிப்பார்க்கும்
இனம்புரியாத அழுகை மட்டும்!

சேர்ந்து வாழமுடியாமல்
சோர்ந்துப்போய் பாலையில்;
வாழ்வதற்க்காக வளைகுடாவிற்குச் சென்று
வாழாவெட்டியாக இப்படி ஆளுக்கொரு மூலையில்!

வளைகுடா வருமானமோ
வாய்க்கும் வயிற்றுக்கும் மட்டுமே;
முட்டி மோதிப் சேர்த்தாலும்
கட்டிப்போட ஒன்றுமில்லை!

ஒளியிளந்த என் முகமோ
ஓளிரும் நீ வந்தால்;
வலி விலகிப்போகும்
நீ வரும் வழியை
என் விழிக் கண்டால்!!

No comments:

Post a Comment