தூரமாக நீ இருந்தாலும்
சாரலாக நம் நினைவுகள்;
திகட்டாத நாளாய் நம்
திருமண நாளாம்!
தடவிய நறுமணம் மறைவதற்குள்
தாகத்துடன் பாலைவனப் பயணம்!
அவசர விடுப்பில்
அவசரமாய் திருமணம்!
முடித்து நாடு திரும்பினேன்
மூன்றே நாளில்;
தோய்ந்த முகமும்
துவண்டத் தோள்களும்
தள்ளாடும் நடையுடன் இங்கே நான்!
பலிக்கடாவாய் ஆக்கினேனோ உன்னை
பனியாய் கண்களில் முட்டும் உன் கண்ணீர்
பரிதவிக்கவைத்த பாலைவன என் பயணம்!
அலைப்பேசியில் அழைத்தாலும்
அதிகமாய் உன் அழுகைச் சப்தம் மட்டும்தான்!
கலையாத மருதாணியும் என்
கண்களில் நிற்க!
கேளியும் கிண்டலுமாய் இங்கே
புதுப் மாப்பிள்ளை என நண்பர்கள் கொறிக்க;
அழுதுக் கொண்டே சிரித்துக் கொண்டேன்
அயல் நாட்டின் அவலத்தை எண்ணி!!Tweet
No comments:
Post a Comment