கனவென்றுத் தெரிந்தும்
விழிகளை விலக்க மாட்டேன்;
இருக்கிறது இன்னும்
அரைமணி குளியலறைக்கு
அலுவலகத்திற்க்காக!
சண்டைப் போட்டாலும்
தொண்டையில் சிக்கும்;
உன் நினைவால்
வலையில் தடுமாறி
விழுந்தாலும் தூண்களாக
உன் நினைவலை!
அந்நிய நாட்டில்
அந்நியமாய் நான்;
அந்நியோன்மாய் இருந்த நாமோ
அகதிகளாய்;
நீ மறுவீட்டில்
நான் மறுநாட்டில்!
இந்த முறை உனக்கு
இரண்டு வளையல்கள்;
அழகாய் சிரிப்பாய்;
விற்ற 15 சவரனை மறந்து!
என் மனம் புரிந்து
கனம் கொடுப்பாய்;
குணம் தெரிந்து
ரணம் நீக்குவாய்!
பாதியில் வந்தாலும்
புரியாத புதிராய் உன்
பாசம்!
மனம் நிறைய ஆசைக் கொண்டு
மறைக்காதீர்கள் இனியும்;
கொட்டிதீர்த்துவிடுங்கள்
கொப்பளிக்கும் அன்பை! Tweet
//இந்த முறை உனக்கு
ReplyDeleteஇரண்டு வளையல்கள்;
அழகாய் சிரிப்பாய்;
விற்ற 15 சவரனை மறந்து!
என் மனம் புரிந்து
கனம் கொடுப்பாய்;
குணம் தெரிந்து
ரணம் நீக்குவாய்!
பாதியில் வந்தாலும்
புரியாத புதிராய் உன்
பாசம்!//
இயல்பாக எளிமையான வார்த்தைகளால் மனத்தைக் கவரும் அழகிய கவிதை. படித்தவுடன் ஏனோ கொஞ்சம் கணக்கிறது இதயம்...