புரியாத உன் பாசம் ...


உன்னை அழைக்கும் போதே
குளிருதம்மா உள்ளம்;
கோடி நபர் இருந்தாலும்
உன் அன்பில் மட்டுமே இல்லாத கள்ளம்!

எப்போதும் விலக மாட்டாய் எனைவிட்டு
யாருக்கும்  கொடுக்கமாட்டாய் என்னை விட்டு!
புரியாத உன் பாசம் புனிதமானது
புரிந்துக்கொள்ள மிகவும் அரிதானது!

காதோடு நரைவிழுந்தப்பின்னும் என்
காதைத் திருகும் உரிமை உனக்கு மட்டும்தான்;
பசிக்கவில்லை என புசிக்கமால் இருந்தாலும்
ஊட்டி விடும் உன் விரல் மருந்தால்
செரிமானம் ஆகும் உள்ளமும் சேர்ந்து!

தோளுக்குமேல் வளர்ந்தாலும் என்
தலை சாயும் உன் மடியில்தான்;
உன் பிரசவ வேதனையை உணர்ந்துக் கொண்டேன்
எனக்கொரு குழந்தைப்  பிறக்கையிலே!

போதாதம்மா காலம் உனக்கு நான் பணிசெய்ய
புரிந்ததம்மா எனக்கு;
எதற்க்காக ஏந்தல் நபியின் போதனைகள் என்று!!

உன்னை அழைக்கும் போதே
குளிருதம்மா உள்ளம்;
கோடி நபர் இருந்தாலும்
உன் அன்பில் மட்டுமே இல்லாத கள்ளம்!

எப்போதும் விலக மாட்டாய் எனைவிட்டு
யாருக்கும்  கொடுக்கமாட்டாய் என்னை விட்டு!
புரியாத உன் பாசம் புனிதமானது
புரிந்துக்கொள்ள மிகவும் அரிதானது!

காதோடு நரைவிழுந்தப்பின்னும் என்
காதைத் திருகும் உரிமை உனக்கு மட்டும்தான்;
பசிக்கவில்லை என புசிக்கமால் இருந்தாலும்
ஊட்டி விடும் உன் விரல் மருந்தால்
செரிமானம் ஆகும் உள்ளமும் சேர்ந்து!

தோளுக்குமேல் வளர்ந்தாலும் என்
தலை சாயும் உன் மடியில்தான்;
உன் பிரசவ வேதனையை உணர்ந்துக் கொண்டேன்
எனக்கொரு குழந்தைப்  பிறக்கையிலே!

போதாதம்மா காலம் உனக்கு நான் பணிசெய்ய
புரிந்ததம்மா எனக்கு;
எதற்க்காக ஏந்தல் நபியின் போதனைகள் என்று!!

2 comments:

 1. அருமை  அன்புடன்
  திகழ்

  ReplyDelete
 2. அம்மா.அம்மா...அம்மா...
  அம்மாவுக்கு நிகர் அம்மா தான் சகோ.. அவளின் அன்பில் எந்த மாற்றமும் இல்லை... மாறாத மாற்றத்தை போல !!!!!!!!!!

  ReplyDelete