வீரத்தோடு வீழ...
வறண்ட இதயத்திலும்
கருணை சுரக்கும்;
வாழமுடியாத நாட்டிற்கு
வாரிசுகள் நாங்கள்!

இழந்ததை மீட்க இன்னும்
இழக்கும் சமுதாயம்;
குருதிகளோடு குடும்பம்
நடத்தும் துர்பாக்கியவான்கள்!

இனி நரம்புகள் முறுக்கேறி
அனலோடு நெஞ்சம்
கனலோடு கரத்தில்
கற்களுடன் களத்தில்;
இனி சுவாசிக்கட்டும்
சுதந்திரக் காற்றை
என் தலைமுறை!

அழியட்டும் அகதிகள் முகாம்;
வெட்கிக்குனியட்டும் எதிரிகளின் முகம்!
மானத்தோடு வாழ; வீரத்தோடு வீழ
கற்றுத்தந்த என் இஸ்லாம்!

நடைக்கொண்டு
படையுடன் மோது;
விழுந்தாலும் விதையாய்
இறந்தாலும் கருவாய்
தீர்த்துவிடுவோம் சுதந்திரத் தாகத்தை
முத்தமிட்டு முகர்ந்துவிடுவோம்
சுவர்க்கத்தை!வறண்ட இதயத்திலும்
கருணை சுரக்கும்;
வாழமுடியாத நாட்டிற்கு
வாரிசுகள் நாங்கள்!

இழந்ததை மீட்க இன்னும்
இழக்கும் சமுதாயம்;
குருதிகளோடு குடும்பம்
நடத்தும் துர்பாக்கியவான்கள்!

இனி நரம்புகள் முறுக்கேறி
அனலோடு நெஞ்சம்
கனலோடு கரத்தில்
கற்களுடன் களத்தில்;
இனி சுவாசிக்கட்டும்
சுதந்திரக் காற்றை
என் தலைமுறை!

அழியட்டும் அகதிகள் முகாம்;
வெட்கிக்குனியட்டும் எதிரிகளின் முகம்!
மானத்தோடு வாழ; வீரத்தோடு வீழ
கற்றுத்தந்த என் இஸ்லாம்!

நடைக்கொண்டு
படையுடன் மோது;
விழுந்தாலும் விதையாய்
இறந்தாலும் கருவாய்
தீர்த்துவிடுவோம் சுதந்திரத் தாகத்தை
முத்தமிட்டு முகர்ந்துவிடுவோம்
சுவர்க்கத்தை!

No comments:

Post a Comment