எருது சிங்கம் பாடத்திலே...ஏகத்துவத்தை எத்திவைக்க
ஏறாத படிகள் இல்லை
வாங்காத அடிகளில்லை!

ஒடஒட விரட்டும் போது
ஒன்றாய்தானே ஒடினோம்;
மறைந்துக்கொள்ள இடம் கண்டு
முதல் உரிமை
உனக்குண்டு என்றோம்!

துவண்டப் போது
தோள்கொடுத்தோம்;
கலங்கும் போது
கரம் கொடுத்தோம்;

ஒன்றாய் இருந்த நாமோ
உடைத்துவிட்டுச் சென்றோம்;
இயக்கத்தை கலைத்துவிட்டுச் சென்றோம்!

அதுவரை
முகர்ந்துக்கொண்ட நாமோ
முகத்தைத் திருப்பிக்கொண்டோம்!
ஒருவரை ஒருவர் வெறுத்துக்கொண்டோம்!

காரசாரமாய் மேடையில்
ஏறினோம் – சகோதரத்துவத்தை
பாடையில் ஏற்றினோம்;

வீணான பேச்சாலே
ஈமானை மறந்தோம்;
காரமாகப் பேசுவது
வீரமாக நினைத்திருந்தோம்;
வெற்றிக்களிப்பில் தனித்திருந்தோம்!

ஏங்காத நாளில்லை
ஏன் இந்த அவல நிலை;
எருது சிங்கம் பாடத்திலே
எருது வீழ்ச்சியை படித்தோமே;
பள்ளிக்கதையை மறந்தோமே!

பொதுவான எதிரிக்கு
ஒன்றுப்பட்டு நிற்போம்;
நின்றுக்காட்டி ஜெயிப்போம்!

இரத்தவெறிக் கொண்ட
காலமிது;
இரத்த உறவே சேர்ந்துவிடு!

நமக்கு
ஆறாத ரணமுண்டு
தீராதப் பகையுண்டு;
களம் காணுவோம்
ஒன்றாய்
பிரிந்திருக்க வேண்டாம்
இரண்டாய்!


ஏகத்துவத்தை எத்திவைக்க
ஏறாத படிகள் இல்லை
வாங்காத அடிகளில்லை!

ஒடஒட விரட்டும் போது
ஒன்றாய்தானே ஒடினோம்;
மறைந்துக்கொள்ள இடம் கண்டு
முதல் உரிமை
உனக்குண்டு என்றோம்!

துவண்டப் போது
தோள்கொடுத்தோம்;
கலங்கும் போது
கரம் கொடுத்தோம்;

ஒன்றாய் இருந்த நாமோ
உடைத்துவிட்டுச் சென்றோம்;
இயக்கத்தை கலைத்துவிட்டுச் சென்றோம்!

அதுவரை
முகர்ந்துக்கொண்ட நாமோ
முகத்தைத் திருப்பிக்கொண்டோம்!
ஒருவரை ஒருவர் வெறுத்துக்கொண்டோம்!

காரசாரமாய் மேடையில்
ஏறினோம் – சகோதரத்துவத்தை
பாடையில் ஏற்றினோம்;

வீணான பேச்சாலே
ஈமானை மறந்தோம்;
காரமாகப் பேசுவது
வீரமாக நினைத்திருந்தோம்;
வெற்றிக்களிப்பில் தனித்திருந்தோம்!

ஏங்காத நாளில்லை
ஏன் இந்த அவல நிலை;
எருது சிங்கம் பாடத்திலே
எருது வீழ்ச்சியை படித்தோமே;
பள்ளிக்கதையை மறந்தோமே!

பொதுவான எதிரிக்கு
ஒன்றுப்பட்டு நிற்போம்;
நின்றுக்காட்டி ஜெயிப்போம்!

இரத்தவெறிக் கொண்ட
காலமிது;
இரத்த உறவே சேர்ந்துவிடு!

நமக்கு
ஆறாத ரணமுண்டு
தீராதப் பகையுண்டு;
களம் காணுவோம்
ஒன்றாய்
பிரிந்திருக்க வேண்டாம்
இரண்டாய்!

No comments:

Post a Comment