இப்படிக்கு உன் தங்கை..


பொய்க்கும் இளமைக்கு
மொய்க்கும் இளசுகள்;
வண்ண வண்ண ஆசைகளால்
சின்னாபின்னாமாக்க
சிரிக்கும் சில்லறைகள்!

நிலையில்லா இவ்வுலகத்திற்கு
பலியாக மாட்டேன்;
படித்தாண்ட மாட்டேன்!

தடுமாறும் வயதில்
கொடி மாற மாட்டேன்;
மாற்றானுக்கு இடம்
கொடுக்க மாட்டேன்!

பயணம் போன உங்களின்
மானத்தை கப்பல் ஏற்ற மாற்றேன்;
கனம் சுமக்கும் உங்கள்
கடமைக்கு ரணம் சேர்க்கமாட்டேன்!

வழிக்காட்டும் உங்களுக்கு
வலிக்கொடுக்க மாட்டேன்;
பழித்தரமாட்டேன்;
பழித்துக்காட்ட விடமாட்டேன்!

மனனம் செய்த
மறை வரிகள்;
வைர வரியாய்;
செதிக்கிவைத்து;
செவிகளில் ஒலிக்கவைத்து
வளர்ந்தப்பெண் நான்!

நழுவாது என் பர்தா;
நழுவினால்
தழுவும் என் உயிர்;
கமழும் சுவனத்திற்கு!

இப்படிக்கு உன் தங்கை!

பொய்க்கும் இளமைக்கு
மொய்க்கும் இளசுகள்;
வண்ண வண்ண ஆசைகளால்
சின்னாபின்னாமாக்க
சிரிக்கும் சில்லறைகள்!

நிலையில்லா இவ்வுலகத்திற்கு
பலியாக மாட்டேன்;
படித்தாண்ட மாட்டேன்!

தடுமாறும் வயதில்
கொடி மாற மாட்டேன்;
மாற்றானுக்கு இடம்
கொடுக்க மாட்டேன்!

பயணம் போன உங்களின்
மானத்தை கப்பல் ஏற்ற மாற்றேன்;
கனம் சுமக்கும் உங்கள்
கடமைக்கு ரணம் சேர்க்கமாட்டேன்!

வழிக்காட்டும் உங்களுக்கு
வலிக்கொடுக்க மாட்டேன்;
பழித்தரமாட்டேன்;
பழித்துக்காட்ட விடமாட்டேன்!

மனனம் செய்த
மறை வரிகள்;
வைர வரியாய்;
செதிக்கிவைத்து;
செவிகளில் ஒலிக்கவைத்து
வளர்ந்தப்பெண் நான்!

நழுவாது என் பர்தா;
நழுவினால்
தழுவும் என் உயிர்;
கமழும் சுவனத்திற்கு!

இப்படிக்கு உன் தங்கை!

2 comments:

  1. அஸ்ஸலாமு அலைக்கும் , மேன்மையான கருத்து சகோதரனே ! மலரட்டும் உங்கள் படைப்புகள் !! துவாவுடன் அன்பு சகோதரன்!!!

    ReplyDelete
  2. தங்கையின் அன்பு மடல் மனதுக்கு இதமாகட்டும்.

    ReplyDelete