வயதேறி
அதனால் முறுக்கேறி
வழிமாறிச் செல்லும்
என் பெண்ணே!
விட்டு ஓட;
நகையை விற்று ஓட;
மாற்றானுக்கு மனம் கொடுத்து
மார்க்கத்தை மறந்த என் பெண்ணே!
அடைக்காக்கும்
உறவுகளை அறுத்துவிட்டு;
எல்லோரையும் வெறுத்துவிட்டு
படிக்காமல் பட்டம் வாங்கும்
என் ஒடுகாலிப் பெண்ணே!
தலைமுறையை
தவிக்கவிட்டு;
அவமானத்தை அள்ளித்தந்து
தடம்மாற தவிக்கும் என் பெண்ணே!
அள்ளிக்கொடுக்கும்
உன் இளமையை;
கிளரிவிட்டு அதன்பின் கிள்ளிவிட்டு
எங்கோ உன்னை
விட்டுட்டு பின்
விற்று விட்டு ஒடுவான்!
மனம் ஒடிந்த நீயோ
வீதிக்கு கொண்டுவந்த உன்
வீட்டிற்கு போகமுடியாமல்
மரணம் எடுப்பாய் – இல்லையேல்
தனம் எடுக்க தாசியாவாய்!
எல்லாம் முடிந்து
எல்லோரும் செல்லும்
இடத்திற்கு வருவாய்;
வினாவிற்கு விடையின்றி
நரகத்திற்கு புது வரவாய்
”தீ”யிற்கு புது வருவாய்!
அதனால்
பழிக்கொடுக்கும்
படியைத் தாண்டாதே;
ஒடிப்போகும் எண்ணம் வேண்டாதே!
Tweet
No comments:
Post a Comment