நானும் இந்தியக் குடிமகன்தான்..வெள்ளைப் பனிமலையில்
இரத்த சரித்திரங்கள்;
பிஞ்சுகளையும் விட்டுவைக்காத
எங்கள் இராணுவம்!

வேலியேப் பயிரை மேயும்
கேள்விக் கேட்டால்
வேள்வி நடத்தும்
கேலிக்கூட்டம்!

இரத்தக் கறைப்படிந்த
மண்ணும் கண்ணீர் சிந்தும்;
இரக்கமற்ற அரக்கர்கள்
இருக்கிறார்கள் இந்தியாவில்
இன்னும்!
விடிகின்றப் பொழுதை
இருளாக்கி;
இதயத்தை இரும்பாக்கி;
எங்களைப் பலியாக்கி;
பகடைக்காய்கள் நாங்கள்
பயங்கரவாதிகளா;
கொன்றுக் குவிக்கும்
உனக்குப் பெயர்
காவல்காரர்களா!

எங்கள் பிணத்தின் மீது
உன் பாதம் வைத்து;
பதக்கங்களை உன் மார்பில் வைத்து;
ஜனநாயகத்தை அடகுவைத்து;
எங்களை இப்படி புலம்பவைத்து!
பூரிப்படையும் உனக்குப் பெயர்
தடுப்புச்சுவரா!

உறைந்துப் போகும் நாட்டிலே
விறைத்துப்போய்;
பூமிக்கு விதையாய் போய்;
கழுத்தறுக்கும்
உங்களுக்குப் பெயர்
காவல் படையல்ல
காவிப்படை!


வெள்ளைப் பனிமலையில்
இரத்த சரித்திரங்கள்;
பிஞ்சுகளையும் விட்டுவைக்காத
எங்கள் இராணுவம்!

வேலியேப் பயிரை மேயும்
கேள்விக் கேட்டால்
வேள்வி நடத்தும்
கேலிக்கூட்டம்!

இரத்தக் கறைப்படிந்த
மண்ணும் கண்ணீர் சிந்தும்;
இரக்கமற்ற அரக்கர்கள்
இருக்கிறார்கள் இந்தியாவில்
இன்னும்!
விடிகின்றப் பொழுதை
இருளாக்கி;
இதயத்தை இரும்பாக்கி;
எங்களைப் பலியாக்கி;
பகடைக்காய்கள் நாங்கள்
பயங்கரவாதிகளா;
கொன்றுக் குவிக்கும்
உனக்குப் பெயர்
காவல்காரர்களா!

எங்கள் பிணத்தின் மீது
உன் பாதம் வைத்து;
பதக்கங்களை உன் மார்பில் வைத்து;
ஜனநாயகத்தை அடகுவைத்து;
எங்களை இப்படி புலம்பவைத்து!
பூரிப்படையும் உனக்குப் பெயர்
தடுப்புச்சுவரா!

உறைந்துப் போகும் நாட்டிலே
விறைத்துப்போய்;
பூமிக்கு விதையாய் போய்;
கழுத்தறுக்கும்
உங்களுக்குப் பெயர்
காவல் படையல்ல
காவிப்படை!

1 comment:

  1. இன்னும் ஒரு அமைதிப்படை? எம்மண்ணை ஏப்பம் விட்டது போல் காஸ்மீரத்திலும்? யாழ்

    ReplyDelete