ஏங்குவேன் விடுமுறைக்காக..உன்னோடுப் பேசவே
ஒரு பங்கு என் ஊதியம்
இணையத்திற்காக
நம் இணக்கத்திற்காக!

அள்ளிக் கொடுக்க
எண்ணுவேன் -  மாதமானால்;
கிள்ளிக் கொடுக்க பணத்தை
எண்ணுவேன்!

விலங்கு இடப்படாத
கைதியாக நான் இங்கே;
விடுதலைக்காக ஏங்குவேன்
விடுமுறைக்காக!

இணைப்பு துண்டித்ததும்
இறுக்கமாக இருக்கும்
இதயத்திற்கு புழுக்கமாக
இருக்கும்!

மறக்க முடியா உன்
நினைவுகளுடன்
மாதத்தை விரட்டும்
உன் மணாளன்!

உன்
நிழற்படங்கள்
நிழற்குடையாக;
சூடான சுவாசங்கள்
கண்களை இறுக்கும்
கண்ணீர் துளிகள் தெறிக்கும்!

குரல் கேட்டாலும்
மடல் கேட்டு 
அடம்பிடிப்பாய்;
வரைந்து அனுப்பினால்
விரைந்து அழைப்புக்கொடுப்பாய்;
குரல் கேட்க வேண்டுமென்று!

இறுதி இரண்டு வரிகள்
தெரியவில்லை என
புகார் செய்வாய்;
அழிந்த எழுத்துக்களுக்கு
காரணம் வழிந்த என்
கண்ணீர் என்று தெரிந்தும்!


உன்னோடுப் பேசவே
ஒரு பங்கு என் ஊதியம்
இணையத்திற்காக
நம் இணக்கத்திற்காக!

அள்ளிக் கொடுக்க
எண்ணுவேன் -  மாதமானால்;
கிள்ளிக் கொடுக்க பணத்தை
எண்ணுவேன்!

விலங்கு இடப்படாத
கைதியாக நான் இங்கே;
விடுதலைக்காக ஏங்குவேன்
விடுமுறைக்காக!

இணைப்பு துண்டித்ததும்
இறுக்கமாக இருக்கும்
இதயத்திற்கு புழுக்கமாக
இருக்கும்!

மறக்க முடியா உன்
நினைவுகளுடன்
மாதத்தை விரட்டும்
உன் மணாளன்!

உன்
நிழற்படங்கள்
நிழற்குடையாக;
சூடான சுவாசங்கள்
கண்களை இறுக்கும்
கண்ணீர் துளிகள் தெறிக்கும்!

குரல் கேட்டாலும்
மடல் கேட்டு 
அடம்பிடிப்பாய்;
வரைந்து அனுப்பினால்
விரைந்து அழைப்புக்கொடுப்பாய்;
குரல் கேட்க வேண்டுமென்று!

இறுதி இரண்டு வரிகள்
தெரியவில்லை என
புகார் செய்வாய்;
அழிந்த எழுத்துக்களுக்கு
காரணம் வழிந்த என்
கண்ணீர் என்று தெரிந்தும்!

4 comments:

 1. நல்லதொரு அனுபவக் கவிதை...ரசித்தேன்....வாழ்த்துக்கள்

  ReplyDelete
 2. Awesum.....
  Hats off

  //குரல் கேட்டாலும்
  மடல் கேட்டு
  அடம்பிடிப்பாய்;
  வரைந்து அனுப்பினால்
  விரைந்து அழைப்புக்கொடுப்பாய்;
  குரல் கேட்க வேண்டுமென்று!//

  intha varihal thookkal

  ReplyDelete
 3. we are choosing our life(abroud)
  if it will continues our life is over da per 2 year 2 month leave..

  ReplyDelete
 4. //இறுதி இரண்டு வரிகள்
  தெரியவில்லை என
  புகார் செய்வாய்;
  அழிந்த எழுத்துக்களுக்கு
  காரணம் வழிந்த என்
  கண்ணீர் என்று தெரிந்தும்!// கண்னீரை வரவழைத்த கவிதை

  ReplyDelete