நிரந்தரமாய்
இறந்துப்போனச்
சட்டங்கள்;
விழித்திருந்தாலும்
விழி மூடிவிடும்
எங்களைக் கண்டு!
குரல் கொடுக்க
விரல் விட்டு
எண்ணும் கூட்டம்;
அதுவும் விரல் வேண்டும்
ஓட்டுக்கு என்பதால்!
தேர்தல் மைப் பூசி
ஒளி மங்க;
பொய்ப் பேசி
மெய் மறைக்கும்!
காவியுடன்
கைக்கோர்த்து
காவல்காரர்கள்
கனைத்துவிட்டு
குரல்கொடுப்பார்கள்
"சட்டம் தன்
கடமையைச் செய்யும்"!
மாசுக் கொண்ட
நீதிமன்றம்;
பாசி(ஸ)க் கொண்டுக்
கிடக்கும் - எங்களுடைய
வழக்கு வழுக்கும்!
பாவப்பட்ட நாங்கள்
இரண்டாந்தாரமாய்
இந்தியாவில்! Tweet
No comments:
Post a Comment