கத்துவது ஊமை பாஷையாக..
தோட்டாக்களும்
துவண்டுப்போகட்டும்;
வெட்கித் தலைக்குனியட்டும்
மக்கிப் போன எங்கள்
நினைவுகளுக்கு இந்த உலகம்!

பாலகனும் தீனுக்காக
போராடும் பாலஸ்தீன்;
சுதந்திரக் காற்றுக்கு
இங்கு அறுபது வயதும்
கொதிக்கும்;
மானமில்லா மனிதநேயம்
மரக்கட்டையாய் கிடக்கும்!

ஒதுக்கப்பட்ட நாங்கள்
விதைக்கப்படுகிறோம்;
அணு அணுவாய்
செதுக்கப்படுகிறோம்!

கேட்பாரில்லை
கொடுப்பாரில்லை
தடுப்பாரில்லை;
செவிடனாய் போன
இவ்வுலகத்திற்கு நாங்கள்
கத்துவது ஊமை பாஷையாக!

சூடான எங்கள் கண்ணீரும்
உன்னை சுட்டெரிக்கும்;
முத்தமிட்டு அனுப்பும்
கல் உன் முகத்திரையை
கிழிக்கட்டும்!

போகட்டும் எங்கள் மீதான பழி;
விலகட்டும் எங்கள் வலி;
திறக்கட்டும் எங்களுக்கான வழி;
வரலாறு எழுதட்டும் புது வரி!தோட்டாக்களும்
துவண்டுப்போகட்டும்;
வெட்கித் தலைக்குனியட்டும்
மக்கிப் போன எங்கள்
நினைவுகளுக்கு இந்த உலகம்!

பாலகனும் தீனுக்காக
போராடும் பாலஸ்தீன்;
சுதந்திரக் காற்றுக்கு
இங்கு அறுபது வயதும்
கொதிக்கும்;
மானமில்லா மனிதநேயம்
மரக்கட்டையாய் கிடக்கும்!

ஒதுக்கப்பட்ட நாங்கள்
விதைக்கப்படுகிறோம்;
அணு அணுவாய்
செதுக்கப்படுகிறோம்!

கேட்பாரில்லை
கொடுப்பாரில்லை
தடுப்பாரில்லை;
செவிடனாய் போன
இவ்வுலகத்திற்கு நாங்கள்
கத்துவது ஊமை பாஷையாக!

சூடான எங்கள் கண்ணீரும்
உன்னை சுட்டெரிக்கும்;
முத்தமிட்டு அனுப்பும்
கல் உன் முகத்திரையை
கிழிக்கட்டும்!

போகட்டும் எங்கள் மீதான பழி;
விலகட்டும் எங்கள் வலி;
திறக்கட்டும் எங்களுக்கான வழி;
வரலாறு எழுதட்டும் புது வரி!

1 comment:

  1. என்றுதான் விடியுமோ.... பாலஸ்தீன விடியல்

    ReplyDelete