ஈரமான இமைகள்..சூடானப் பக்கங்கள்
சுடும் நெஞ்சத்தை ;
கன்னத்தோடுக்
கண்ணீர் வந்துக்
கவிதைச் சொல்ல;
விழுங்க முடியாமல்
விழுந்துவிடும்
வார்த்தைகள்!

இரவோடு தலையணையும்
அணைத்துக்கொள்ள
உறக்கம் மட்டும்
ஏங்கி நிற்கும்
தழுவாமல் நான்
தனித்து நிற்பதைக் கண்டு!

உன் புகைப்படமும்
புன்னகைத்து நிற்க;
வெட்கப்பட்டு வெளியில்
வழியும் கண்ணீர்த் துளிகள்!

மனமுரண்டுச் செய்து
மனமுடைத்துக்  கொண்டாலும்;
மனம் முழுதும் நீ இருப்பதால்
சரணடைவேன் சூடானச் 
சினத்துடன்!

திக்கிப் பேசும் நம்
குழந்தையோ
தித்திப்பாய்ப் பேச;
அடக்கி வைத்த
அழுகையோ
அணையின்றி
முட்டி மோதும்!

நனைந்துப் போன
என் இமைகள்
என்னை வெட்கப்படவைக்க;
புரிந்துக்கொண்ட நண்பர்கள்
புன்னகைத்துவிட்டுப் போவார்கள்!


சூடானப் பக்கங்கள்
சுடும் நெஞ்சத்தை ;
கன்னத்தோடுக்
கண்ணீர் வந்துக்
கவிதைச் சொல்ல;
விழுங்க முடியாமல்
விழுந்துவிடும்
வார்த்தைகள்!

இரவோடு தலையணையும்
அணைத்துக்கொள்ள
உறக்கம் மட்டும்
ஏங்கி நிற்கும்
தழுவாமல் நான்
தனித்து நிற்பதைக் கண்டு!

உன் புகைப்படமும்
புன்னகைத்து நிற்க;
வெட்கப்பட்டு வெளியில்
வழியும் கண்ணீர்த் துளிகள்!

மனமுரண்டுச் செய்து
மனமுடைத்துக்  கொண்டாலும்;
மனம் முழுதும் நீ இருப்பதால்
சரணடைவேன் சூடானச் 
சினத்துடன்!

திக்கிப் பேசும் நம்
குழந்தையோ
தித்திப்பாய்ப் பேச;
அடக்கி வைத்த
அழுகையோ
அணையின்றி
முட்டி மோதும்!

நனைந்துப் போன
என் இமைகள்
என்னை வெட்கப்படவைக்க;
புரிந்துக்கொண்ட நண்பர்கள்
புன்னகைத்துவிட்டுப் போவார்கள்!

1 comment:

  1. ம்ம்..ரொம்ப பீல் ஆச்சு...

    ReplyDelete