ச்ச்சீ அன்னையர் தினமா..


வரி ஏதுமில்லை
வர்ணிக்க உனை;
நீ உண்ணாவிட்டாலும்
நான் உண்பதற்கு
ஒடிவருவாய் உணவோடு
உன் அன்பையும் பிசைந்து!

அழுது வடியும் எனை
வாகனத்தில் ஏற்றிடுவாய்
பள்ளிக்குச் செல்ல;
அனுப்பிவிட்டு அழுதுக்கொண்டிருப்பாய்
சிறுபிள்ளையாய் நீ!
 
தோளுக்கு மேல் வளர்ந்தாலும்
எண்ணையைக் கொண்டு
என்னை இழுப்பாய்
வறண்டுப்போன என் சிகைக்காக;
ஈரமான உன் பாசத்தைக்கொண்டு!

என் மண நாளில்
மனம்விட்டு அழுதாய்;
மகிழ்ச்சியில் மழலையாய்;
குலுங்கி அழும் உனக்கு
நான் இன்னும் குழந்தையாக!

தினமும் கொண்டாட வேண்டிய உனை
தினம் வைத்துக் கொண்டாடுவதா;
இறுகிப்போன இதயத்திற்குதான்
வருடத்திற்கு முறை
அன்னையர் தினம்!

புரிந்துக்கொண்டேன் உனை
நான் எனப் பொய்யாகச் சொன்னாலும்;
திணறித்தான் போவேன்
புரியாத உன் பாசத்திற்கு!

வரி ஏதுமில்லை
வர்ணிக்க உனை;
நீ உண்ணாவிட்டாலும்
நான் உண்பதற்கு
ஒடிவருவாய் உணவோடு
உன் அன்பையும் பிசைந்து!

அழுது வடியும் எனை
வாகனத்தில் ஏற்றிடுவாய்
பள்ளிக்குச் செல்ல;
அனுப்பிவிட்டு அழுதுக்கொண்டிருப்பாய்
சிறுபிள்ளையாய் நீ!
 
தோளுக்கு மேல் வளர்ந்தாலும்
எண்ணையைக் கொண்டு
என்னை இழுப்பாய்
வறண்டுப்போன என் சிகைக்காக;
ஈரமான உன் பாசத்தைக்கொண்டு!

என் மண நாளில்
மனம்விட்டு அழுதாய்;
மகிழ்ச்சியில் மழலையாய்;
குலுங்கி அழும் உனக்கு
நான் இன்னும் குழந்தையாக!

தினமும் கொண்டாட வேண்டிய உனை
தினம் வைத்துக் கொண்டாடுவதா;
இறுகிப்போன இதயத்திற்குதான்
வருடத்திற்கு முறை
அன்னையர் தினம்!

புரிந்துக்கொண்டேன் உனை
நான் எனப் பொய்யாகச் சொன்னாலும்;
திணறித்தான் போவேன்
புரியாத உன் பாசத்திற்கு!

2 comments:

 1. தினமும் கொண்டாட வேண்டிய உனை தினம் வைத்துக் கொண்டாடுவதா;

  பணத்தை தேடி பயணம் தொடங்கி
  தொலைத்துவிட்ட
  அந்த ஈரமான பாசத்தை சற்று நினைத்துப்பார்க்கையில் கண்ணீரில் மூழ்குகிறது என் வாழ்க்கை...
  கண்ணீரை துடைத்துவிடும் உன் விரல்கள் எங்கே!
  காயப்பட்ட இதயத்திற்கு மருந்தாகும் உன் அன்பு எங்கே!
  கடல் கடந்து வந்தவன் இளைப்பார நினைக்கிறான், இளைப்பாரும் உன் மடி எங்கே!

  இப்படி பல கேள்விகளை உங்களின் அருமையான வரிகள் கேட்கவைக்கிறது தோழரே!!!
  உங்கள் கவிதை மிகவும் பிடித்திருக்கிறது.

  ReplyDelete
 2. என்ன ஒரு அருமையான வரிகள். வாழ்த்துக்கள்

  அன்புடன்

  அ.மு.அன்வர் சதாத்

  ReplyDelete