புதைக்கப்பட்ட தியாகங்கள்!


ஒலித்து ஜொலித்து
ஒளிர்ந்த  நாங்கள்
ஒதுக்கப்பட்டோம்!

மறைக்கப்பட்ட எங்கள்
வரலாறுகள்;
புதைக்கப்பட்ட எங்கள்
தியாகங்கள்!

விடுதலைக்கு கருவாய்;
வீரத்திற்கு எருவாய்;
சத்தான சமூகம் இன்று
முத்திரையிட்டு
மூன்றாம் தரமாய்
ஒதுக்கப்பட்டுள்ள அவலம்!

அந்நிய மொழியை
அந்நியமாக்கி; 
எல்லோருக்கும் அந்நியமாய்;
அகப்பட்டுள்ள பொறிக்குள்
எலியாய் - பொய்யான
வரலாற்றுக்கு
பலியாய் நாங்கள்!

தியாகங்கள் தீவிராவதியாக
வளம் கொண்ட எங்கள்
பலங்கள் பயங்கரவாதியாக;
சித்தரிக்கப்பட்டு;
சிறையிலடைக்கப்பட்ட
எங்கள் உரிமைகள்!

ஓய்ந்துப் போன நம்
ஓலங்கள் ஒலிக்கட்டும்;
வளைந்துப்போன நம்
நம் வீரம் விளையட்டும்!

ஒன்றாக இருந்தால்
நன்றாக இருப்போம்;
இரண்டாகப் போனால்
திண்டாடம் கொள்வோம்!

ஒலித்து ஜொலித்து
ஒளிர்ந்த  நாங்கள்
ஒதுக்கப்பட்டோம்!

மறைக்கப்பட்ட எங்கள்
வரலாறுகள்;
புதைக்கப்பட்ட எங்கள்
தியாகங்கள்!

விடுதலைக்கு கருவாய்;
வீரத்திற்கு எருவாய்;
சத்தான சமூகம் இன்று
முத்திரையிட்டு
மூன்றாம் தரமாய்
ஒதுக்கப்பட்டுள்ள அவலம்!

அந்நிய மொழியை
அந்நியமாக்கி; 
எல்லோருக்கும் அந்நியமாய்;
அகப்பட்டுள்ள பொறிக்குள்
எலியாய் - பொய்யான
வரலாற்றுக்கு
பலியாய் நாங்கள்!

தியாகங்கள் தீவிராவதியாக
வளம் கொண்ட எங்கள்
பலங்கள் பயங்கரவாதியாக;
சித்தரிக்கப்பட்டு;
சிறையிலடைக்கப்பட்ட
எங்கள் உரிமைகள்!

ஓய்ந்துப் போன நம்
ஓலங்கள் ஒலிக்கட்டும்;
வளைந்துப்போன நம்
நம் வீரம் விளையட்டும்!

ஒன்றாக இருந்தால்
நன்றாக இருப்போம்;
இரண்டாகப் போனால்
திண்டாடம் கொள்வோம்!

No comments:

Post a Comment