விட்டுப்பிரிந்தப் பின்..மழுங்கச் செய்யும்
கோபத்தால் விலகிச் செல்வோம்;
புழுக்கம் நிறைந்த மனதினால்
வியர்க்கும் விழிகளுக்கு!

விட்டுப்பிரிந்தப் பின்
ஒட்டிக்கொள்ள மனம்தேடும்;
அகம் நிறைந்த அகம்பாவமோ
அனலாய் கொதிக்கும்;
நம்மைச் சேரவிடாமல் தடுக்கும்!

ததும்பும் ஆசைக்கொண்டதால்
வெதும்பும் என் மனம்;
என்னைவிடுத்து
நீ யாரிடம் பேசினாலும்!

மென்மையான அன்பால்
வன்மை நடக்கும்;
மனதிற்குள் வன்முறை நடக்கும்!

அழவைக்கப் பேசுவேன்;
அழுதப்பின் மனதின்
ஒரத்தில் சிரிப்பேன் – நீ
என்மீதுக் கொண்ட
அன்பைக்கண்டு ரசிப்பேன்!

மனம் நிறைய நீ என்பதால்
கனம் தெரியாது;
கடல் தாண்டிப்போனாலும்
நம் உறவு விலகாது!

போகட்டும் காயங்கள்
காணாமல்;
வயதனாலும் இருக்கட்டும்
இளமையாக உள்ளம்!

கண்ணீர் முட்டினால்
கரம் மாறட்டும்
துடைத்துகொள்ள
ஒருவர் மாற்றி ஒருவருக்கு!


மழுங்கச் செய்யும்
கோபத்தால் விலகிச் செல்வோம்;
புழுக்கம் நிறைந்த மனதினால்
வியர்க்கும் விழிகளுக்கு!

விட்டுப்பிரிந்தப் பின்
ஒட்டிக்கொள்ள மனம்தேடும்;
அகம் நிறைந்த அகம்பாவமோ
அனலாய் கொதிக்கும்;
நம்மைச் சேரவிடாமல் தடுக்கும்!

ததும்பும் ஆசைக்கொண்டதால்
வெதும்பும் என் மனம்;
என்னைவிடுத்து
நீ யாரிடம் பேசினாலும்!

மென்மையான அன்பால்
வன்மை நடக்கும்;
மனதிற்குள் வன்முறை நடக்கும்!

அழவைக்கப் பேசுவேன்;
அழுதப்பின் மனதின்
ஒரத்தில் சிரிப்பேன் – நீ
என்மீதுக் கொண்ட
அன்பைக்கண்டு ரசிப்பேன்!

மனம் நிறைய நீ என்பதால்
கனம் தெரியாது;
கடல் தாண்டிப்போனாலும்
நம் உறவு விலகாது!

போகட்டும் காயங்கள்
காணாமல்;
வயதனாலும் இருக்கட்டும்
இளமையாக உள்ளம்!

கண்ணீர் முட்டினால்
கரம் மாறட்டும்
துடைத்துகொள்ள
ஒருவர் மாற்றி ஒருவருக்கு!

1 comment:

 1. நான்
  சரித்திரத்தில் தான்
  கேட்டிருக்கிறேன்
  சமரின் முடிவில்
  தோற்றவனின்
  பொன்னும் பெண்ணும் பொருளும்
  வென்றவனுக்கு என
  ஆனால்
  சமரும் இல்லை
  தோல்வியும் இல்லை
  பொன்னும் கொள்ளை இடப்படுகிறது
  பெண்களும் சூறையாடப்படுகிறார்கள்
  ஆனால் விந்தை
  வீரர்களின் உயிர் மட்டும்
  போகவில்லை
  வெளிநாட்டில்
  நான்.................

  ReplyDelete