கடைசி நிமிடம்..இமை மூடும் 
விழியால்
இருள் சூழும்!

முடியும் நேரம்
தெரிந்ததும்
முட்டிக் கண்ணீர் திக்கும்;
தொண்டை விக்கித்து நிற்கும்!

உதறிப் போடும்
உடலிலே உயிரும்
ஓடி ஆடும்!

சப்தம் கொடுத்துக் 
கதறிப் பார்த்தாலும்
நிசப்தம் மட்டும்
நிலவும்!

வாழ்ந்தக் காலங்களை 
வழியனுப்பச் சொந்தம்
சிந்தும் கண்ணீர்!

அச்சம் கொடுக்கும்
மரணமோ
அச்சுப் பிசகாமல்
நிற்கும்;

இறுதித் தருணம்
நினைக்கையிலே
இருதயம் கனத்துப் போகும்!

விட்டுப் பிரியும்
உயிரை
விரட்ட முடியாது
எவரும்!


இமை மூடும் 
விழியால்
இருள் சூழும்!

முடியும் நேரம்
தெரிந்ததும்
முட்டிக் கண்ணீர் திக்கும்;
தொண்டை விக்கித்து நிற்கும்!

உதறிப் போடும்
உடலிலே உயிரும்
ஓடி ஆடும்!

சப்தம் கொடுத்துக் 
கதறிப் பார்த்தாலும்
நிசப்தம் மட்டும்
நிலவும்!

வாழ்ந்தக் காலங்களை 
வழியனுப்பச் சொந்தம்
சிந்தும் கண்ணீர்!

அச்சம் கொடுக்கும்
மரணமோ
அச்சுப் பிசகாமல்
நிற்கும்;

இறுதித் தருணம்
நினைக்கையிலே
இருதயம் கனத்துப் போகும்!

விட்டுப் பிரியும்
உயிரை
விரட்ட முடியாது
எவரும்!

3 comments:

  1. உண்மையை அழகாய் சொல்லி இருக்கிறீர்கள் பாராட்டுக்கள்.

    ReplyDelete
  2. வலி மிகுந்த வாழ்க்கை தந்த வலி... வலிக்கத்தான் செய்கிறது. இருப்பினும் வாழ்ந்து தீர... அல்லது தீர்க்க வேண்டிய கட்டாயம் இருக்கிறது. வந்து போங்கள் என் வலைப் பூ பக்கம். நன்றி.

    ReplyDelete