ஒய்வுக்கால வயதிலே..குருவியாய் திரிந்தோம்
அருவியாய் சிரித்தோம்;
இடியே விழுந்தாலும்
அடிவயிறு குழுங்கச் சிரிப்போம்!

வம்பு என்றால்
கம்புடன் நிற்போம்;
தெம்புடன் இருந்ததால்
திமிருடனே இருப்போம்!

கூட்டமாய் இருந்த நாமோ
ஆளுக்கொருக் கூட்டை நோக்கி
பறந்தோம்;
ஆளுக்கொருக் கூடுக்கட்ட
உழைத்தோம்!

நாட்டைவிட்டு நகர்ந்த நாமோ
நாதியற்று கிடந்தோம்;
மாற்றாரிடம் சொல்லி சிரிக்கும்போது
உன் கதை மெல்ல திறக்கும்;
உன் புகழ் கொடிக்கட்டி பறக்கும்!

என்றாவது பேசினாலும்
குலுங்கக் குலுங்கச் சிரிப்போம்;
விழுந்து விழிந்து ரசிப்போம்!

பெருநாளுக்கு நாம் எடுத்த
சட்டையோ வண்ணமிழந்துப் போனது;
நம் கன்னமும் குழி விழுந்துப் போனது!

உழைத்து அலுத்து
ஒய்ந்துவிட்டோம்
ஒய்வுக்கால வயதிலே;
நரை விழுந்து கண்ணில்
திரை விழுந்து நீயும் நானும் நாட்டிலே!

இழந்துப் போன
இன்பத்தை அழுதுக்கொண்டே
வடித்துவிட்டோம்;
வடிந்துப்போன வாலிபத்தை
வளைக்குடாவில் தொலைத்துவிட்டோம்!


குருவியாய் திரிந்தோம்
அருவியாய் சிரித்தோம்;
இடியே விழுந்தாலும்
அடிவயிறு குழுங்கச் சிரிப்போம்!

வம்பு என்றால்
கம்புடன் நிற்போம்;
தெம்புடன் இருந்ததால்
திமிருடனே இருப்போம்!

கூட்டமாய் இருந்த நாமோ
ஆளுக்கொருக் கூட்டை நோக்கி
பறந்தோம்;
ஆளுக்கொருக் கூடுக்கட்ட
உழைத்தோம்!

நாட்டைவிட்டு நகர்ந்த நாமோ
நாதியற்று கிடந்தோம்;
மாற்றாரிடம் சொல்லி சிரிக்கும்போது
உன் கதை மெல்ல திறக்கும்;
உன் புகழ் கொடிக்கட்டி பறக்கும்!

என்றாவது பேசினாலும்
குலுங்கக் குலுங்கச் சிரிப்போம்;
விழுந்து விழிந்து ரசிப்போம்!

பெருநாளுக்கு நாம் எடுத்த
சட்டையோ வண்ணமிழந்துப் போனது;
நம் கன்னமும் குழி விழுந்துப் போனது!

உழைத்து அலுத்து
ஒய்ந்துவிட்டோம்
ஒய்வுக்கால வயதிலே;
நரை விழுந்து கண்ணில்
திரை விழுந்து நீயும் நானும் நாட்டிலே!

இழந்துப் போன
இன்பத்தை அழுதுக்கொண்டே
வடித்துவிட்டோம்;
வடிந்துப்போன வாலிபத்தை
வளைக்குடாவில் தொலைத்துவிட்டோம்!

1 comment:

  1. வளைக்குடாவில் குடும்பம் இல்லாமல் வாழும் மக்களை பார்க்க பார்க்க மகிழ்வாக இருக்கும் ஆனால் அவர்கள் உள் மனம் படும் வேதனை கவிதையிலும் கொட்ட முடியாது என்பதனை உடைத்து அழகாக கவிதை வடித்துள்ளீர்கள்

    ReplyDelete