உனக்காக..
துரோகங்கள் ஏதுமில்லாத்
தியாகி உன் அன்னை
கதறி அழுதாள்
கைப்பேசியில்!

விற்றுவிட்டதாய் சொல்லி;
விட்டு வர மறுக்கிறாயா
விடுதியை விட்டு!

உறவுகளைப் பூட்டி
உணர்வுகளை வாட்டி;
கறுத்த என் தோலின்
வெள்ளை வியர்வையை
அந்நிய நாட்டில் தெளித்து
உழைக்கிறதின் நோக்கம்
தெரியுமா உனக்கு!

ஏறாதக் கல்வியால்
என்னை ஏற்றிவிட்டனர்
மாற்றான் தேசத்திற்கு;
உழைப்பாளி என்றாலும்
உபயோகமில்லாச் சம்பளம்;!

கணநேரம் யோசித்து
கனமாக்கி மனதை;
எங்களை உரமாக்கி
உன்னை உருவாக்க
விட்டு வந்தோம்
விடுதியில்!

கற்காதக் கல்வியைக்
கற்பிக்கத் தெரியாது
உன்னிடத்தில்;
விடுதியில் விட்டாலும்
பரவாயில்லை ஒளிருவாய்
எதிர்காலத்தில்!துரோகங்கள் ஏதுமில்லாத்
தியாகி உன் அன்னை
கதறி அழுதாள்
கைப்பேசியில்!

விற்றுவிட்டதாய் சொல்லி;
விட்டு வர மறுக்கிறாயா
விடுதியை விட்டு!

உறவுகளைப் பூட்டி
உணர்வுகளை வாட்டி;
கறுத்த என் தோலின்
வெள்ளை வியர்வையை
அந்நிய நாட்டில் தெளித்து
உழைக்கிறதின் நோக்கம்
தெரியுமா உனக்கு!

ஏறாதக் கல்வியால்
என்னை ஏற்றிவிட்டனர்
மாற்றான் தேசத்திற்கு;
உழைப்பாளி என்றாலும்
உபயோகமில்லாச் சம்பளம்;!

கணநேரம் யோசித்து
கனமாக்கி மனதை;
எங்களை உரமாக்கி
உன்னை உருவாக்க
விட்டு வந்தோம்
விடுதியில்!

கற்காதக் கல்வியைக்
கற்பிக்கத் தெரியாது
உன்னிடத்தில்;
விடுதியில் விட்டாலும்
பரவாயில்லை ஒளிருவாய்
எதிர்காலத்தில்!

1 comment:

 1. கற்காதக் கல்வியைக்
  கற்பிக்கத் தெரியாது
  உன்னிடத்தில்;
  விடுதியில் விட்டாலும்
  பரவாயில்லை ஒளிருவாய்
  எதிர்காலத்தில்!
  என்ன கொடுமை ஏன் வேண்டும் இப்படி

  ReplyDelete