மணக்கும் உன் விரல்..சிண்டைப் பிடித்து
சண்டைப் போடும்
அக்காவும் நானும்;
மிரட்டிக் கொண்டே
எங்களை புரட்டி எடுப்பாய்!

அழுது ஓய்ந்தப்பின்
ஓடிவருவாய் எங்களை
தூக்க வருவாய்!
இப்போது
நீ அழுதுக் கொண்டே
முத்தமிடுவாய்;
முகர்ந்துவிடுவாய்!

படுத்தாலும் உன் கன்னம்
யார் பக்கம் என்று
சண்டையிடுவோம்!

தாண்டாத உன்
நீதியால் எங்களை
வென்று எடுப்பாய்!

பெரியவள் என்று
அக்காவிற்கு போக்குக் காட்டி;
என் பக்கம் நீ முகத்தைக் காட்டி;
உறக்கம் வந்தப் பின்
அக்காவை தொட்டு அணைப்பாய்;
மறுக்கையாலே என்னைக்
கட்டிப் பிடிப்பாய்!

பல்துலக்கும் குச்சியாக!
பல வருடம்
மணக்கும் உன் விரல்தான்;
அதட்டினாலும் இனிப்பது
உன் குரல்தான்!


சிண்டைப் பிடித்து
சண்டைப் போடும்
அக்காவும் நானும்;
மிரட்டிக் கொண்டே
எங்களை புரட்டி எடுப்பாய்!

அழுது ஓய்ந்தப்பின்
ஓடிவருவாய் எங்களை
தூக்க வருவாய்!
இப்போது
நீ அழுதுக் கொண்டே
முத்தமிடுவாய்;
முகர்ந்துவிடுவாய்!

படுத்தாலும் உன் கன்னம்
யார் பக்கம் என்று
சண்டையிடுவோம்!

தாண்டாத உன்
நீதியால் எங்களை
வென்று எடுப்பாய்!

பெரியவள் என்று
அக்காவிற்கு போக்குக் காட்டி;
என் பக்கம் நீ முகத்தைக் காட்டி;
உறக்கம் வந்தப் பின்
அக்காவை தொட்டு அணைப்பாய்;
மறுக்கையாலே என்னைக்
கட்டிப் பிடிப்பாய்!

பல்துலக்கும் குச்சியாக!
பல வருடம்
மணக்கும் உன் விரல்தான்;
அதட்டினாலும் இனிப்பது
உன் குரல்தான்!

No comments:

Post a Comment