மது அருந்தி
மதிக் கொல்லும்;
கதியே என இதில் இருந்து
விதி மீதுப் பழிப்போடும்!
தள்ளாடும் உன்
கால் நடைக்கு
கால்நடைகளும் இளிக்கும்;
கொண்டாட்டம் என நீ
நினைத்ததெல்லாம்
கொல்லிக் கட்டையாய்
கருகும்!
சுய அறிவை இழந்துவிட்டு
தெருமுனையில் கிடப்பாய்;
கடைசித் தடவை என்று
இந்தமுறையும் குடிப்பாய்!
செத்துப் போகக் குடித்துவிட்டு
சத்து என சிரிப்பாய்;
பழுதுப்பட்ட குடலுக்கு
விழுந்து அழுது கொதிப்பாய்!
அதட்ட வேண்டிய
அரசாங்கமோ
ஊற்றிக்கொடுக்கச் சொல்லும்;
தரமான சரக்கிற்கு
தமிழகமே சப்ளைப் பண்ணும்!
குடித்து அழுகும் குடலும்
குடித்ததினால் அழுவும்
குடும்பம்!
மது ஒழிக்க; வழிவகுக்க;
ஒளிக்கொடுக்க; வலிவிலக்க;
சட்டம் ஒன்று வேண்டும்
அதற்கு கையில்
சவுக்கைக் கொடுக்க வேண்டும்!
மார்க்கம் சொன்னத் தொணியிலே
மதுவைத் தடுக்க வேண்டும்;
முரண்டுப் பிடித்தால்
முட்டி இரண்டையும்
தரையை முட்ட செய்யவேண்டும்!
கடுமையானத் தண்டனைத்தான்
கடமை இழக்கச் செய்யாது;
சொல்லி வளர்ந்த இஸ்லாம்
ஒரு நாளும் பொய்யாகாது!
Tweet
//கடுமையானத் தண்டனைத்தான்
ReplyDeleteகடமை இழக்கச் செய்யாது;//
உங்களின் ஆற்றாமை கவி வரிகளில் தெரிகிறது.....அருமையாக இருக்கிறது கவிதைகள் எல்லாம்....நேரம் கிடைக்கும் போது அனைத்தையும் படிக்க வேண்டும் என்று உங்களை தொடருகிறேன்... வாழ்த்துக்கள்...