இப்படிக்கு உன் புதுமனைவி

மணம் வீசும்
மணநாள் முடிந்தது;
மாதமே உன் விடுப்பு என்பதால்
விடைக்கொடுத்தாய்;
வலிக்கொடுத்தாய்!

களங்கிய மனமும்
கலங்கிய கண்ணும்;
விளங்கிய நீயும்
விலகிச் சென்றுவிட்டாய்!
இளமைக்கு
விலங்கிட்டு சென்றுவிட்டாய்!

குளமென  நினைத்து
குளித்துக்கொண்டிருக்கும்
என் விழிகள் - வழிகள்
தெரியாததால் வழிமேல்
விழிவைத்துக் காத்துக்கொண்டிருக்கிறேன்
உன் வரவுக்காக;
வளைகுடாக் கொடுக்கும்
விடுப்பிற்காக!

நறுமணம் மாறா
தொங்கிக் கொண்டிருக்கும் உன்
மணநாள் சட்டை!
புன்முறுவலுடன் உன் நிழற்படங்கள்    
புண்ணாகும் மனதிற்கு
நிழற்குடையாய்!

கைப்பேசியில் கதைகள்
நூறு அளந்தாலும்
தினம் அழுவாத நாளில்லை;
ஆறுதல் சொல்ல அருகில் நீயில்லை!

கத்தி அழமுடியாமல்
வத்திப்போன விழிகளைத்
தலையணையில்
பொத்தி அழுகிறேன்!
துக்கம் தொண்டையை அடைக்க
தூக்கமும் இமைகளை அணைக்க;
உறங்கப்போவேன் உறங்கிப்போவேன்!
என்னை அறியாமல்
என் அன்னை அறியாமல்!

இப்படிக்கு உன் புதுமனைவி!
மணம் வீசும்
மணநாள் முடிந்தது;
மாதமே உன் விடுப்பு என்பதால்
விடைக்கொடுத்தாய்;
வலிக்கொடுத்தாய்!

களங்கிய மனமும்
கலங்கிய கண்ணும்;
விளங்கிய நீயும்
விலகிச் சென்றுவிட்டாய்!
இளமைக்கு
விலங்கிட்டு சென்றுவிட்டாய்!

குளமென  நினைத்து
குளித்துக்கொண்டிருக்கும்
என் விழிகள் - வழிகள்
தெரியாததால் வழிமேல்
விழிவைத்துக் காத்துக்கொண்டிருக்கிறேன்
உன் வரவுக்காக;
வளைகுடாக் கொடுக்கும்
விடுப்பிற்காக!

நறுமணம் மாறா
தொங்கிக் கொண்டிருக்கும் உன்
மணநாள் சட்டை!
புன்முறுவலுடன் உன் நிழற்படங்கள்    
புண்ணாகும் மனதிற்கு
நிழற்குடையாய்!

கைப்பேசியில் கதைகள்
நூறு அளந்தாலும்
தினம் அழுவாத நாளில்லை;
ஆறுதல் சொல்ல அருகில் நீயில்லை!

கத்தி அழமுடியாமல்
வத்திப்போன விழிகளைத்
தலையணையில்
பொத்தி அழுகிறேன்!
துக்கம் தொண்டையை அடைக்க
தூக்கமும் இமைகளை அணைக்க;
உறங்கப்போவேன் உறங்கிப்போவேன்!
என்னை அறியாமல்
என் அன்னை அறியாமல்!

இப்படிக்கு உன் புதுமனைவி!

3 comments:

  1. Very touching

    sunitha @ http://tamiltospokenenglish.blogspot.com/

    ReplyDelete
  2. "களங்கிய மனமும்
    கலங்கிய கண்ணும்;
    விளங்கிய நீயும்
    விலகிச் சென்றுவிட்டாய்!"
    பிரிவின் துய(தூ)ரத்தை..... மனைவியை விட வேறு யாரால் அளவிடமுடியும். நல்ல கவிதை

    ReplyDelete
  3. அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்..

    அருமையான கவிதை சகோ
    இன்று தான் உங்களின் தளம் பார்த்தேன் தொடர்கிறேன்

    http://valaiyukam.blogspot.com/2011/05/blog-post.html
    கொட்டி கிடக்கிறதா சவூதியில்?, வெளிநாட்டு வாழ்வு

    இது என்னுடைய பதிவு படித்து பாருங்கள் சகோ

    ReplyDelete