வருகிறேன் ஊருக்கு


இறுகிப்போன இமையும்;
பாரத்தை இறக்கிவைத்து;
உதடுகள் இரண்டும்
உள்ளுக்குள்ளேச் சிரித்துக்கொண்டு;
காத்திருக்கும் பாதமும்
வியர்த்திருக்கும்
உள்ளங்கையும் உனக்காக;
ஊருக்குப்போகும் அந்த நாளுக்காக!

கைதுச் செய்தத்
தனிமைக்கு விலங்கிட்டு;
தூங்காமல் தவித்த
இதயத்திற்குத்
தாலட்டுப்பாடி;
வாடித்தவிக்கும் உனக்குப்
புன்னகையைச் சூட வருகிறேன்!

மூட்டையை;
முடிச்சுப் போட்டுக்கொண்டு;
கட்டவிழ்க்க வருகிறேன்;
கவலைகளைக்
கரையேற்ற வருகிறேன்;
உனைத்தேடி வருகிறேன்!கவிதைக்குத் கரு தந்தவர்: 
நாகூர் மீரான் -ETA Ascon

இறுகிப்போன இமையும்;
பாரத்தை இறக்கிவைத்து;
உதடுகள் இரண்டும்
உள்ளுக்குள்ளேச் சிரித்துக்கொண்டு;
காத்திருக்கும் பாதமும்
வியர்த்திருக்கும்
உள்ளங்கையும் உனக்காக;
ஊருக்குப்போகும் அந்த நாளுக்காக!

கைதுச் செய்தத்
தனிமைக்கு விலங்கிட்டு;
தூங்காமல் தவித்த
இதயத்திற்குத்
தாலட்டுப்பாடி;
வாடித்தவிக்கும் உனக்குப்
புன்னகையைச் சூட வருகிறேன்!

மூட்டையை;
முடிச்சுப் போட்டுக்கொண்டு;
கட்டவிழ்க்க வருகிறேன்;
கவலைகளைக்
கரையேற்ற வருகிறேன்;
உனைத்தேடி வருகிறேன்!கவிதைக்குத் கரு தந்தவர்: 
நாகூர் மீரான் -ETA Ascon

5 comments:

 1. ஊருக்குப்போகும் அந்த நாளுக்காக!.......

  ..மிகவும் மகிழ்வாக இருக்கும். இனியவிடுமுறையாகட்டும் வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 2. வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி நிலாமதி அவர்களே; இந்தக் கவிதை பொதுவாக வளைகுடாவில் இருந்து தாயகத்திற்கு செல்லும் சகோதரர்களுக்காக எழுதியவை.

  ReplyDelete
 3. ரொம்ப பீல் ஆயிடுச்சு சகோ...ஏனென்றால் நானும் வெளிநாட்டில் தன வேலை செய்கிறேன்...முற்றிலும் உண்மை...

  ReplyDelete
 4. நீங்கள் மட்டும் அல்ல சகோ... நாங்களும் countdown ஆரம்பித்து விடுகிறோம்...

  ReplyDelete