தொங்கு ராஜா தொங்கு


அரிசிக்கும்,எண்ணெய்க்கும் 
முண்டியடுத்து;
குளித்த வியர்வையின்
ஈரம் காயாமல்;
வரிசையில் விழிப் பாயும்;
வெயிலில் நின்று மூளைக் காயும்!

அடிப்பட்ட ரணத்தில்
வலியின் சினத்தில் கத்த;
பணம் பார்க்காமல்
சப்தம் செவிச் சேராது;
அரசாங்க மருத்துவமனைக்கு!

நீதித் தேடி;
காவல் தேடி;
படியேறினால்;
முரட்டுப் பேச்சால்;
வரட்டு வாதம் செய்யும்
காவல்துறைக் கதவுகளும்!

எட்டிப்பிடிக்கும்
சட்டம் இருந்தாலும்;
சட்டையில் ஒட்டியிருக்கும்
பணம் இருந்தால் நீ
தனிக்காட்டு ராஜா;
இல்லையேல்;
அதிகாரம் செய்யும்
அரசாங்க அதிகாரியிடம் நீ
தொங்கு ராஜா தொங்கு!

அரிசிக்கும்,எண்ணெய்க்கும் 
முண்டியடுத்து;
குளித்த வியர்வையின்
ஈரம் காயாமல்;
வரிசையில் விழிப் பாயும்;
வெயிலில் நின்று மூளைக் காயும்!

அடிப்பட்ட ரணத்தில்
வலியின் சினத்தில் கத்த;
பணம் பார்க்காமல்
சப்தம் செவிச் சேராது;
அரசாங்க மருத்துவமனைக்கு!

நீதித் தேடி;
காவல் தேடி;
படியேறினால்;
முரட்டுப் பேச்சால்;
வரட்டு வாதம் செய்யும்
காவல்துறைக் கதவுகளும்!

எட்டிப்பிடிக்கும்
சட்டம் இருந்தாலும்;
சட்டையில் ஒட்டியிருக்கும்
பணம் இருந்தால் நீ
தனிக்காட்டு ராஜா;
இல்லையேல்;
அதிகாரம் செய்யும்
அரசாங்க அதிகாரியிடம் நீ
தொங்கு ராஜா தொங்கு!

No comments:

Post a Comment