புதுப்பெண் என்னை


அமைதியான மனதில்
திருமணக் கல்லை
எறிந்துவிட்டு;
சுழல்கள் சுருங்கும் முன்னே;
நிழலாய் நீ என் அருகில்!

பரப்பரப்பாய் முடிந்த
மணத்திலும்;
மனம் முழுவதும்
மணம் வீச;
உன் மனம்
முழுவதும் நான் வீச!

பூரிப்பும்
புன்னகையும்
புதுப்பெண் என்னை;
புடைத்து எடுக்க;
வெற்றிப்பெற்றப்
பெருமிதத்தில்
என் பெற்றோர்!

மென்மையான
நாட்களைக் கொய்ய;
நீ கொண்டுவந்த உன்
பயணச் சீட்டு;
ஒட்டுப் போட்ட என்
சந்தோஷத்தில் சல்லடையாய்
ஓட்டையப் போட!

நிலைக் குலைந்து
நிலை வாசலில் நின்று;
விழிக் கரைய – என் முக
ஒளிக் குறைய;
உதடுகள் இரண்டும்
பிணங்கிக் கொண்டு;
கரம் என்
கண்ணீரைத் துடைக்க;
மனம் மட்டும் ஏங்கும்;
நீ போவது பொய்யாக
இருக்கக் கூடாதா என்று!

அமைதியான மனதில்
திருமணக் கல்லை
எறிந்துவிட்டு;
சுழல்கள் சுருங்கும் முன்னே;
நிழலாய் நீ என் அருகில்!

பரப்பரப்பாய் முடிந்த
மணத்திலும்;
மனம் முழுவதும்
மணம் வீச;
உன் மனம்
முழுவதும் நான் வீச!

பூரிப்பும்
புன்னகையும்
புதுப்பெண் என்னை;
புடைத்து எடுக்க;
வெற்றிப்பெற்றப்
பெருமிதத்தில்
என் பெற்றோர்!

மென்மையான
நாட்களைக் கொய்ய;
நீ கொண்டுவந்த உன்
பயணச் சீட்டு;
ஒட்டுப் போட்ட என்
சந்தோஷத்தில் சல்லடையாய்
ஓட்டையப் போட!

நிலைக் குலைந்து
நிலை வாசலில் நின்று;
விழிக் கரைய – என் முக
ஒளிக் குறைய;
உதடுகள் இரண்டும்
பிணங்கிக் கொண்டு;
கரம் என்
கண்ணீரைத் துடைக்க;
மனம் மட்டும் ஏங்கும்;
நீ போவது பொய்யாக
இருக்கக் கூடாதா என்று!

1 comment:

  1. ஏக்கம் அன்று என்னவள் எனக்காக ஏங்கியதை இக்கவிதையில் இன்று உணர்கிறேன் தோழரே அருமையான கவிதை அகம் அழுகிறது வியந்து பாராட்டுகிறேன் எம்வேதனைகள்தான் வரிகளில் காண்கிறேன்

    அருமை தோழா அருமை
    http://chenaitamilulaa.bigforumpro.com/t21554-topic#206730

    ReplyDelete