தட்டிக் கேட்கும்
என் துணிவும்;
சுயமரியாதையை
விட்டுக்கொடுக்கா என்
தொணியையும்;
வளைகுடாவில்
விட்டுக்கொடுக்கிறேன்;
மாறுப்பட்ட முகம் கொண்ட;
வேறுப்பட்ட மனம் கொண்ட;
மனிதர்களுக்கு நடுவே
ஒட்டியிருக்கிறேன்;
உனக்காக என் சுபாவத்தைச்
சுருட்டி வைக்கிறேன்!
பணம் தேடிப்
பாலைவனத்தில்;
சினம் தூண்டும்
மரியாதையைச்
சரணடையைச் செய்து;
விழி முழுவதும்
நீர் கோர்த்திருக்கும்
உனக்காக விட்டுக்கொடுக்கிறேன்;
நம் பிள்ளைக்காக
விற்று நிற்கிறேன்!
கவிதைக்கு கரு தந்தவர்:
ஃபெரோஸ்கான் - முத்துப்பேட்டை
No comments:
Post a Comment