தலைப்புக்கு மட்டும்


விழுந்த மொட்டுக்கள்
உதிர்ந்த பசுமை இலைகள்;
தலைப்புக்கு மட்டும்
நாங்கள் தேவை பத்திரிக்கைக்கு!

மரத்துப்போன மனதிற்கு
மறந்துப்போன சிரிப்பலைகள்
இறந்துப்போன உள்ளங்களுக்கு
இறுதி அஞ்சலி
வறண்டுப்போன விழிகளில்
வாராதக் கண்ணீர்!


எழுதுகோலும் அழும் மையாக
ஆனால் பொய்யாக
அழக்கூட அடம்பிடிக்கும் உலகம்!

செவிகளில் பழக்கப்பட்ட
குண்டுச் சத்தம்;
அழைக்கப் பிள்ளையில்லை  
கொண்டுச் சென்ற
குண்டுப் போடும் சமூகம்!

எறும்புக்கும் அநியாயம் என்றால்
பத்திரிக்கைப் படைத்திரட்டி
பக்கங்கள் நிரம்பும்!

எங்கள் பிணங்களைப் பார்த்தப்பிறகும்
மனங்களைத் திறக்காத
மானங்கெட்ட மனிதர்களின்
மனிதநேயம்!

விழுந்த மொட்டுக்கள்
உதிர்ந்த பசுமை இலைகள்;
தலைப்புக்கு மட்டும்
நாங்கள் தேவை பத்திரிக்கைக்கு!

மரத்துப்போன மனதிற்கு
மறந்துப்போன சிரிப்பலைகள்
இறந்துப்போன உள்ளங்களுக்கு
இறுதி அஞ்சலி
வறண்டுப்போன விழிகளில்
வாராதக் கண்ணீர்!


எழுதுகோலும் அழும் மையாக
ஆனால் பொய்யாக
அழக்கூட அடம்பிடிக்கும் உலகம்!

செவிகளில் பழக்கப்பட்ட
குண்டுச் சத்தம்;
அழைக்கப் பிள்ளையில்லை  
கொண்டுச் சென்ற
குண்டுப் போடும் சமூகம்!

எறும்புக்கும் அநியாயம் என்றால்
பத்திரிக்கைப் படைத்திரட்டி
பக்கங்கள் நிரம்பும்!

எங்கள் பிணங்களைப் பார்த்தப்பிறகும்
மனங்களைத் திறக்காத
மானங்கெட்ட மனிதர்களின்
மனிதநேயம்!

No comments:

Post a Comment