பருவம் இருக்கும்போதே..




செவிகளில் ஏறாததால்
செதில்களில் சேராதக் கல்வி;
பரிந்துரைகளைப் புறந்தள்ளிவிட்டு
பாடப்புத்தகங்களுக்குப்
பாடைக் கட்டியக்காலம்!

சுற்றித் திரிந்ததால்
தூரமானதுக் கல்வி;
மேல்நிலைக் கல்வியோ
பாரமானது!

பாய்பசங்களுக்கு
பயணம் உண்டு என
சிண்டுமுடித்த ஆசிரியர்களால்
துண்டு விழுந்தது என் படிப்பில்!

கெஞ்சிக் கொஞ்சிப் பார்த்த
பெற்றோர்களும் களைப்படைந்து
கடவுச் சீட்டைக் கரம் மாற்றினர்;
என்னைக் கடல் ஏற்றினர்!

சூடேற்றும் பாலையில்
ஈடேற்றம் ஏதுமில்லை;
அணைத்து அழ யாருமில்லை
அடுத்தவேளை உணவில்லை;
தேம்பியழும் என்னை
தாங்கிக்கொள்ள ஆளில்லை!

கல்லாதக் கல்வியால்
பொல்லாதப் பாலையில்
பிழைப்புக்காக!

வளர்ந்துப்போன வயதில்
தளர்ந்துப்போன நான்;
இழந்துப்போன கல்விக்கு
இழப்பீடேதுமில்லை!

பருவம் இருக்கும்போதே
பட்டைத் தீட்டிக்கொள்ளுங்கள்;
முடிந்துப்போனப் பின்னே
முட்டிக்கொண்டு அழுவதில்
பயனில்லை!



செவிகளில் ஏறாததால்
செதில்களில் சேராதக் கல்வி;
பரிந்துரைகளைப் புறந்தள்ளிவிட்டு
பாடப்புத்தகங்களுக்குப்
பாடைக் கட்டியக்காலம்!

சுற்றித் திரிந்ததால்
தூரமானதுக் கல்வி;
மேல்நிலைக் கல்வியோ
பாரமானது!

பாய்பசங்களுக்கு
பயணம் உண்டு என
சிண்டுமுடித்த ஆசிரியர்களால்
துண்டு விழுந்தது என் படிப்பில்!

கெஞ்சிக் கொஞ்சிப் பார்த்த
பெற்றோர்களும் களைப்படைந்து
கடவுச் சீட்டைக் கரம் மாற்றினர்;
என்னைக் கடல் ஏற்றினர்!

சூடேற்றும் பாலையில்
ஈடேற்றம் ஏதுமில்லை;
அணைத்து அழ யாருமில்லை
அடுத்தவேளை உணவில்லை;
தேம்பியழும் என்னை
தாங்கிக்கொள்ள ஆளில்லை!

கல்லாதக் கல்வியால்
பொல்லாதப் பாலையில்
பிழைப்புக்காக!

வளர்ந்துப்போன வயதில்
தளர்ந்துப்போன நான்;
இழந்துப்போன கல்விக்கு
இழப்பீடேதுமில்லை!

பருவம் இருக்கும்போதே
பட்டைத் தீட்டிக்கொள்ளுங்கள்;
முடிந்துப்போனப் பின்னே
முட்டிக்கொண்டு அழுவதில்
பயனில்லை!

2 comments:

  1. உங்கள் பதிவுகள் பெரும்பான்மை படித்தேன் இன்று.
    மன நிறைவு அன்றி பண நிறைவிற்காக பாலைதேசத்தில் இருக்கிறீர்கள் போல.
    வருத்தம் வேண்டாம். இணையத்தில் பதிவு, யாஹூ அரட்டை அறைகளில் என்று நேரத்தை தள்ளுங்கள்.
    விடுமுறைக்கு இந்தியா வந்ததும் இங்கேயே தங்கி விடுங்கள். இங்கே கிடைக்கும் சம்பளத்தில் பொருளியல் saarntha ஆசைகளை
    குறைத்து கொண்டு சந்தோஷமாக வாழ்வை ரசித்து நடத்தலாம்.

    ReplyDelete
  2. "அடுத்தவேளை உணவில்லை;"


    பாலைவனதில் பாசத்திற்க்குத்தான் பஞ்சம்,உணவிற்க்கும் பஞ்சமா என்னால் நம்பமுடியவில்லை.

    ReplyDelete