தொலைக்காட்சிப் பெட்டி..விலைக்கொடுத்து
விஷச்செடியை
நடுவீட்டில் நட்டுவைத்து;
காசுக்கொடுத்து
கண்ணைக் கசக்கும்
குடும்பப் பெண்கள்!

உணவுப் பரிமாற்றம்
செய்தி வேளையில்;
பிள்ளைகள் முகத்தைக்
காண்பது இடைவெளியில்!

கவர்ச்சிக்குக் கண்ணை
மூடியக் காலங்கள் காலமாகி;
ஆபாசத்தைக் குடும்பத்தோடுக்
கண்டுக்களிக்கும் சின்ன வாண்டுகள்!

மென்று விழுங்கும்
கலாச்சாரத்தை அரங்கேற்றி;
அனாச்சாரத்தை அமுலாக்கும்;
புன்னகைத்துப் புண்ணாக்கும்
வண்ணத் தொலைக்காட்சி!

பெட்டிக்குள் கட்டிப்போட்டு
உறக்கத்திற்குப் பிறகும்
ஓடுகாலியாக;
உங்கள் வீட்டிலும்
என் வீட்டிலும்!


விலைக்கொடுத்து
விஷச்செடியை
நடுவீட்டில் நட்டுவைத்து;
காசுக்கொடுத்து
கண்ணைக் கசக்கும்
குடும்பப் பெண்கள்!

உணவுப் பரிமாற்றம்
செய்தி வேளையில்;
பிள்ளைகள் முகத்தைக்
காண்பது இடைவெளியில்!

கவர்ச்சிக்குக் கண்ணை
மூடியக் காலங்கள் காலமாகி;
ஆபாசத்தைக் குடும்பத்தோடுக்
கண்டுக்களிக்கும் சின்ன வாண்டுகள்!

மென்று விழுங்கும்
கலாச்சாரத்தை அரங்கேற்றி;
அனாச்சாரத்தை அமுலாக்கும்;
புன்னகைத்துப் புண்ணாக்கும்
வண்ணத் தொலைக்காட்சி!

பெட்டிக்குள் கட்டிப்போட்டு
உறக்கத்திற்குப் பிறகும்
ஓடுகாலியாக;
உங்கள் வீட்டிலும்
என் வீட்டிலும்!

1 comment:

  1. ஓடு காலிகளில் சிலர் சரியானவர்கள் இல்லையெனில் முகம் மூடி
    வீட்டிலேயே அது

    ReplyDelete