தூக்கம் விற்ற திர்ஹம்ஸ்..கற்றதை விற்கக்
கடவுச் சீட்டுக்
கரத்தில்;
மிரட்சியில் விழிகள்;
மிரண்டது
விசாவா இல்லை
வெளியேற முடியா
மிசாவா!

முட்டியக் கண்ணீரால்
சொந்தங்களை
முகர்ந்துவிட்டு
விட்டுச் செல்கிறேன்
எல்லாவற்றையும்
எடுத்துக் கொண்டு
இதயத்தைப் பிடித்துக் கொண்டு!

கட்டிய மனைவி
கண்ணீருடன்;
ஆறுதல் சொல்ல
அருகில் சென்று
அழுதுவிட்டு நானும் வருவேன்!

உறவுகள் வாசலில்
முகாமிட;
பொங்கி வரும்
அழுகையைக்
கைக்குட்டைக்குச்
சமர்பிக்க!

கட்டி உருண்ட
நண்பர்களோ
கட்டிப்பிடித்து
என் சட்டையை நனைக்க!

கை அசைத்து
காருக்குள் நான்;
கனத்துப் போய்
வெறுத்துப் போய்;
எரியும் இமைகளை
இறுக்க மூடி;
மிச்சமுள்ளக் கண்ணீரையும்
கரைச்சேர்ப்பேன்!

உதடுத் தொட்டு
முத்தங்களை
கைப்பேசிக்குக் கொடுக்க
குதுகலிக்கும் குடும்பம்!

நகமும் சதையுமான
நண்பர்கள் நகர்ந்து
ஆளுக்கொருத் தேசத்தில்!

மச்சான் மாப்பிளே
குரல் போய்;
விரல் தொடும்
இயந்திர வாழ்க்கையில்
இணையத்தில்!

அழும் குழந்தையின் குரலை
ஆடியோவில் கேட்க;
புகைப்படம் கண்டு
பொருத்தம் பார்ப்போம்
அம்மா ஜாடையா
அத்தா ஜாடையா!

அழுது அழுது
மரத்துப்போனதால்
மறைத்துவிடுவேன்
மனைவியிடமிருந்து!

மாறி மாறி
மெய் மறைத்து;
பொய்யுறைப்போம்;
சந்தோஷம் என்று!

வலிக்கொடுக்கும்
வளைகுடாவில்
விழிப்பிதிங்கி
வழியில்லாமல்;
தூக்கம் தொலைத்து
துக்கம் அடைத்து;
திரைக் கடல் தாண்டி
திர்ஹம்ஸிர்க்காக!


கற்றதை விற்கக்
கடவுச் சீட்டுக்
கரத்தில்;
மிரட்சியில் விழிகள்;
மிரண்டது
விசாவா இல்லை
வெளியேற முடியா
மிசாவா!

முட்டியக் கண்ணீரால்
சொந்தங்களை
முகர்ந்துவிட்டு
விட்டுச் செல்கிறேன்
எல்லாவற்றையும்
எடுத்துக் கொண்டு
இதயத்தைப் பிடித்துக் கொண்டு!

கட்டிய மனைவி
கண்ணீருடன்;
ஆறுதல் சொல்ல
அருகில் சென்று
அழுதுவிட்டு நானும் வருவேன்!

உறவுகள் வாசலில்
முகாமிட;
பொங்கி வரும்
அழுகையைக்
கைக்குட்டைக்குச்
சமர்பிக்க!

கட்டி உருண்ட
நண்பர்களோ
கட்டிப்பிடித்து
என் சட்டையை நனைக்க!

கை அசைத்து
காருக்குள் நான்;
கனத்துப் போய்
வெறுத்துப் போய்;
எரியும் இமைகளை
இறுக்க மூடி;
மிச்சமுள்ளக் கண்ணீரையும்
கரைச்சேர்ப்பேன்!

உதடுத் தொட்டு
முத்தங்களை
கைப்பேசிக்குக் கொடுக்க
குதுகலிக்கும் குடும்பம்!

நகமும் சதையுமான
நண்பர்கள் நகர்ந்து
ஆளுக்கொருத் தேசத்தில்!

மச்சான் மாப்பிளே
குரல் போய்;
விரல் தொடும்
இயந்திர வாழ்க்கையில்
இணையத்தில்!

அழும் குழந்தையின் குரலை
ஆடியோவில் கேட்க;
புகைப்படம் கண்டு
பொருத்தம் பார்ப்போம்
அம்மா ஜாடையா
அத்தா ஜாடையா!

அழுது அழுது
மரத்துப்போனதால்
மறைத்துவிடுவேன்
மனைவியிடமிருந்து!

மாறி மாறி
மெய் மறைத்து;
பொய்யுறைப்போம்;
சந்தோஷம் என்று!

வலிக்கொடுக்கும்
வளைகுடாவில்
விழிப்பிதிங்கி
வழியில்லாமல்;
தூக்கம் தொலைத்து
துக்கம் அடைத்து;
திரைக் கடல் தாண்டி
திர்ஹம்ஸிர்க்காக!

5 comments:

 1. "முட்டியக் கண்ணீரால்
  சொந்தங்களை
  முகர்ந்துவிட்டு
  விட்டுச் செல்கிறேன்
  எல்லாவற்றையும்
  எடுத்துக் கொண்டு
  இதயத்தைப் பிடித்துக் கொண்டு!"
  என்ன அருமையான வலிகள்
  விசும்புவதும் விமர்சிப்பது மட்டும் தானா நாம்

  ReplyDelete
 2. தூக்கம் தொலைத்து
  துக்கம் அடைத்து;
  திரைக் கடல் தாண்டி
  திர்ஹம்ஸிர்க்காக!


  பொருளில்லாருக்கு இவ்வுலகில்லை!!!

  ReplyDelete
 3. yes icant say simply is good.................

  But i can say superb& reality kavithai keep rock..........

  ReplyDelete
 4. You should read thookam vittra kaasugal by Rasikow...

  ReplyDelete