ஓயாமல் ஒலிக்கும்தடம் மாறி
தடுமாறி
மனம் மாறி
இடம் மாறி
வலுவிழந்துப்
பாலையில் நான்!

உன்னை நினைத்து
இதயம் கனத்து
உன் நினைவுகள் மறித்து
தூக்கம் மறுத்து;
இருளும் வெளுத்தது!

ஏக்கம் கொண்டு
வாட்டம் கொண்டு
உன் நினைவைக் கொண்டு
நெடுநாளாய் நானிங்கே!

வரமாட்டேன்
வளைகுடாவிற்கு எனத்
தேசம் சென்றாலும்;
பாசத்திற்காகப் பைசா
எடுக்கச் சுவற்றில் அடித்தப்
பந்தாய் பந்தாவாக
மீண்டும் நான்!

சலித்துப் போனச்
சவால்களால் களைத்துப்போன
நண்பர்கள்!

உள்மனது மட்டும்
ஓயாமல் ஒலிக்கும்
என்றாவது ஒரு நாள்
திரும்பாது என் பாதம்
விரும்பாத வளைகுடாவிற்கு!தடம் மாறி
தடுமாறி
மனம் மாறி
இடம் மாறி
வலுவிழந்துப்
பாலையில் நான்!

உன்னை நினைத்து
இதயம் கனத்து
உன் நினைவுகள் மறித்து
தூக்கம் மறுத்து;
இருளும் வெளுத்தது!

ஏக்கம் கொண்டு
வாட்டம் கொண்டு
உன் நினைவைக் கொண்டு
நெடுநாளாய் நானிங்கே!

வரமாட்டேன்
வளைகுடாவிற்கு எனத்
தேசம் சென்றாலும்;
பாசத்திற்காகப் பைசா
எடுக்கச் சுவற்றில் அடித்தப்
பந்தாய் பந்தாவாக
மீண்டும் நான்!

சலித்துப் போனச்
சவால்களால் களைத்துப்போன
நண்பர்கள்!

உள்மனது மட்டும்
ஓயாமல் ஒலிக்கும்
என்றாவது ஒரு நாள்
திரும்பாது என் பாதம்
விரும்பாத வளைகுடாவிற்கு!

1 comment:

  1. மனதுடன் மட்டுமல்லாமல், வலியும்

    ReplyDelete