மன்னித்து விடு மறையோனே ..


நித்தமும் உனை நினைத்திருந்தேன்
நித்திரையிலும் விழித்தெழுந்தேன்;
மாதமாய் பசித்திருந்தேன்
மாசற்ற உன் கருணையை எதிர் நோக்கிருந்தேன்;

கலங்கிய கண்ணீருடன்
கரம் உயர்த்தி இருந்தேன்;
கடைக்கோடி இரவிலும் காத்திருந்தேன்!

தேம்பி தேம்பி அழுகிறேன் ரஹ்மானே
தேற்றுவதற்கு நீ மட்டுமே போதுமானவனே!
எழுந்து நிற்கும் மயிற்கால்களும் – உனக்கு
மண்டியிட்டு மன்னிப்பு கேட்கும் போது!

மன்னித்து விடு மறையோனே
மறந்தும் நான் தவறியிருந்தால்;
தொழுகையாளரோடு என் பாதத்தை
சேர்த்து விடு – மாறி மாறி எங்களுக்குள்
சேற்றை பூசுவதைவிட்டு காத்துவிடு!

நித்தமும் உனை நினைத்திருந்தேன்
நித்திரையிலும் விழித்தெழுந்தேன்;
மாதமாய் பசித்திருந்தேன்
மாசற்ற உன் கருணையை எதிர் நோக்கிருந்தேன்;

கலங்கிய கண்ணீருடன்
கரம் உயர்த்தி இருந்தேன்;
கடைக்கோடி இரவிலும் காத்திருந்தேன்!

தேம்பி தேம்பி அழுகிறேன் ரஹ்மானே
தேற்றுவதற்கு நீ மட்டுமே போதுமானவனே!
எழுந்து நிற்கும் மயிற்கால்களும் – உனக்கு
மண்டியிட்டு மன்னிப்பு கேட்கும் போது!

மன்னித்து விடு மறையோனே
மறந்தும் நான் தவறியிருந்தால்;
தொழுகையாளரோடு என் பாதத்தை
சேர்த்து விடு – மாறி மாறி எங்களுக்குள்
சேற்றை பூசுவதைவிட்டு காத்துவிடு!

1 comment:

  1. யாஅல்லாஹ் அணைத்து மக்களின் துவாக்களையும் நிறைவேற்றுவாயாக ...........

    ReplyDelete