விடுகதை இதற்கு...எல்லோரும் அறையினில் சிரிக்க
நான் மட்டும் தனிமையில் இருக்க;
கலங்கியக் கண்ணீரை
விளங்கிய நண்பர்கள்!

கனவுகள் கண்களில் மிளிர
கடமைகள் கண்டு மிரள;
வழியில்லாமல்
வலியுடன் வளைகுடாவில்!

பலியாய் நம் உறவுகள்
விழிகள் குளத்தில் நீராடும்;
கவலைகளால் தள்ளாடும்!

லட்சியங்கள் சில
லட்சத்திற்க்காக ஏங்கி நிற்கும்;
விடைக்கொடுக்க நினைத்தாலும்
வினாக்களால் ஸ்தம்பித்து நிற்பேன்!

விடுகதை இதற்கு
தொடர்க்கதை இருக்கு;
ஆனாலும் உழைக்கிறேன்
என்னைபோல் என் தலைமுறை
ஏங்காமல் இருக்க;
இங்கு வாராமல் இருக்க!எல்லோரும் அறையினில் சிரிக்க
நான் மட்டும் தனிமையில் இருக்க;
கலங்கியக் கண்ணீரை
விளங்கிய நண்பர்கள்!

கனவுகள் கண்களில் மிளிர
கடமைகள் கண்டு மிரள;
வழியில்லாமல்
வலியுடன் வளைகுடாவில்!

பலியாய் நம் உறவுகள்
விழிகள் குளத்தில் நீராடும்;
கவலைகளால் தள்ளாடும்!

லட்சியங்கள் சில
லட்சத்திற்க்காக ஏங்கி நிற்கும்;
விடைக்கொடுக்க நினைத்தாலும்
வினாக்களால் ஸ்தம்பித்து நிற்பேன்!

விடுகதை இதற்கு
தொடர்க்கதை இருக்கு;
ஆனாலும் உழைக்கிறேன்
என்னைபோல் என் தலைமுறை
ஏங்காமல் இருக்க;
இங்கு வாராமல் இருக்க!

1 comment: